பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்க் களஞ்சியம மணவையாா்


சொல்லும் போது அகராதித் தன்மையைப் பெறுகிறது. அதோடு இவர் அமையாது, தொடர்ந்து சொல் விளக்கத்தையும் பொருள் விளக்கத்தையும் விரிவாகக் கூறி விளக்கி, அதற்குக் கலைக்களஞ்சியத் தன்மையைத் தருகிறார். இவ்வாறு இருவகைத் தன்மைகளையும் ஒருருவாய்க் கொண்டு அமைந்து, தமிழுக்கு ஒரு புதுவகையான நூற்களை அறிமுகம் செய்து புதுமை படைக்கிறார் மணவையார்.

இவரது கலைச் சொல் களஞ்சிய அகராதிகளில் காணும் மற்றொரு சிறப்புத்தன்மை, அவை ஏராளமான படங்களோடு அமைந்துள்ளதாகும். போதிய அளவு படிப்பறிவோ அறிவியல் அறிவோ அழுத்தம் பெறா நிலையில் உள்ளவர்கட்கு படங்கள், பட விளக்கங்களோடு அறிவியல் செய்திகளைக் கூறுவதன் மூலம்தான் அவர்கட்கு உரிய முறையில் அறிவியல் அறிவைப் புகட்ட முடியும் என்பதில் அழுத்தமான கொள்கையுடையவர் மணவையார். அக் கொள்கைக்கேற்பவே இவரது அறிவியல் கலைச் சொல் களஞ்சிய அகராதிகள் அமைந்துள்ளன.

இவ்வகையில் இவர் இதுவரை ஐந்து கலைச் சொல் களஞ்சிய அகராதிகளை வெளியிட்டுள்ளார். அவையாவன:

1. அறிவியல் கலைச் சொல் களஞ்சியம் (முதல் பாகம்)

2. அறிவியல் கலைச் சொல் களஞ்சியம் (இரண்டாம் பாகம்).

3. மருத்துவ, அறிவியல், தொழில் நுட்ப கலைச் சொல் களஞ்சிய அகராதி.