பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தமிழக களஞ்சியம் மணவையார்


ளது. இதன் மூலம் சொற் பொருள் விளக்கம் பெற இயல்கின்றது. இதனால் இதனினும் சுருங்கிய வடிவிலான சொற்செட்டும் பொருட்செறிவுமுடைய நயமிக்கக் கலைச் சொற்களை ஆர்வமுடையவர்கள் நாளை உருவாக்க முற்படலாம்" எனக்கூறி புதிய சொல்லாக்க முயற்சிகளுக்குத் துணைபோக, தான் துடிப்பதை வெளிப்படுத்துகிறார்.

வேறொரு முக்கிய நோக்கத்தையும் உட்கொண்டதாகத் தன் முயற்சி அமைந்திருப்பதை தன் முன்னுரையில் தொடர்ந்து,

"ஒவ்வொரு கலைச் சொல்லின் வாயிலாக அறிவியல் தகவல்களைத் துணுக்குச் செய்திகளாக வாசகர்களுக்கு வழங்க வேண்டும் என்பது எனது நோக்கமாகும். ஏனெனில், இன்றைய சூழ்நிலையில் விரிவான அறிவியல், தொழில் நுட்பச் செய்திகளைக் கட்டுரை வாயிலாகப் படித்தறியும் பொறுமையும் நேரமும் மிகக் குறைவாகவே உள்ளது. அவற்றை ஒருசில வரிகளில் செய்தித் துணுக்குகளாகத் தரும் போது ஒருசில வினாடிகளில் படித்தறிய மனம் விரும்புவது இயல்பு. அவ்வகையில் அறிவியல் செய்திகளை வாசகர்களுக்கு வழங்கவே இந்நூல் கலைக் களஞ்சிய வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது" என்று மணவையார் கூறியுள்ளது நூலின் அமைப்புச் சிறப்பை மட்டுமல்ல; நூலின் நோக்கத்தையும் தெளிவாகவே உணர்த்துவதாகவுள்ளது. இம்முறையில் தமிழில் வெளிவந்த முதல் கலைச் சொல் களஞ்சிய அகராதிகள் என்ற தனிச் சிறப்பையும் இந்நூல்கள் பெறத் தவறவில்லை.

இவரது "மருத்துவ, அறிவியல், தொழில் நுட்ப கலைச் சொல் களஞ்சிய அகராதி" மூன்றாவது கலைச்சொல் களஞ்சியமாக அமைந்திருப்பதோடு ஓரளவு முழு-