பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமுதன்

181


அத்தகைய நுட்ப முறைகளைப் பின்பற்றி மொழிபெயர்ப்புப் பணியைச் செய்வதன் மூலமே சிறந்த மொழி பெயர்ப்பைப் பெற முடியும்."

எனக் கூறுவதோடு அமையாது, தான் வகுத்துள்ள மொழி பெயர்ப்புக் கலையின் நுட்ப முறைகளின் அடிப்படையில் மொழிபெயர்ப்பைப் பன்னிரண்டு வகையாக வகுத்தளித்து வழிகாட்டியுள்ளார் மணவையார் அவையாவன :-

1. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு
(Literal Translation)

2. வரையறையற்ற மொழிபெயர்ப்பு
(Free Translation)

3. பொது மக்களார்வ மொழிபெயர்ப்பு
(Popular Translation)

4. துல்லியமான மொழிபெயர்ப்பு
(Accurate Translation)

5. மொழியாக்கம்
(Transcreation)

6. விரிவான மொழிபெயர்ப்பு
(Magnified Translation)

7. சுருக்க மொழிபெயர்ப்பு
(Abridged Translation)

8. தழுவல் மொழிபெயர்ப்பு
(Adopted Translation)

9. திரைப்பட மொழி மாற்றப் பெயர்ப்பு
(Dubbing Translation)