பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/198

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

தமிழ் வளா்ச்சியில கூரியர் பங்கு


தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தியை நேரில் சந்தித்தும். மாநிலங்களவையில் திரு. வலம்புரி ஜான் உணர்ச்சி பொங்க உரையாற்றியும் "கூரியர்" தமிழ்ப் பதிப்பு எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது என்ற உறுதிமொழியினைப் பெற்றுத் தந்தார்கள்.

இவ்வாறு எத்தனையோ இன்னல்களையும், இடர்ப்பாடுகளையும், சோதனைகளையும் சமாளித்து வீறுநடைப் போட்டு வரும் இதழ் "கூரியர்" தமிழ்ப்பதிப்பாகும்.

இது கல்வி, அறிவியல், பண்பாட்டு இதழாக அமைந் , இதில் மிக அதிக அளவில் இடம்பெறுவது அறிவியல் கட்டுரைகளேயாகும். இதில் இடம் பெறும் அறிவியல் கட்டுரைகள் தற்கால அறிவியல் துறைகள் பலவற்றிலும் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களையும், புதிய கண்டுபிடிப்புகளையும் அந்தத் துறையைச் சார்ந்த உலகப் புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்டு எழுதப்படுகின்றன. அவை தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டு மேனாட்டு இதழ்களுக்கு இணையாக ஆங்கில இதழ் வெளியாகும் அதே சமயத்திலேயே தமிழிலும் வெளியிடப்படுகின்றன. இத்தகைய அரிய வாய்ப்பினைப் பெற்றுள்ள ஒரே தமிழ் இதழ் இதுவேயாகும். பாவேந்தர் பாரதிதாசன்,

வெளியுலகில் சிந்தனையில் புதிது புதிதாக
பிணைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்
எல்லாம் கண்டு
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும்
வேண்டும்"

என்று கண்ட கனவினை "கூரியர்" தமிழ் இதழ் மூலம் மணவையார் நனவாக்கி வருகிறார்.