பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தொகுப்புரை


கடமை எனக் கருதுகின்றனர். அனைத்துக் கட்சிகளுக்கும் அப்பாற்பட்ட தமிழ்த் தொண்டாக இவரது தமிழ்ப் பணியைக் கருதுகின்றனர். இது இவரது பணிக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். மேலும், அனைத்துக் கட்சியினரும் ஏற்றிப் போற்றும் தனிச்சிறப்புப் பெற்ற அறிவியல் தமிழறிஞர் இவராகத்தான் இருக்க முடியும்.

ஒரு சமயம் டாக்டர் மால்கம் ஆதிசேவுையா தலைமையில் மணவையாரின் நூலை வெளியிட்டுப் பேசிய டாக்டர் தெ.பொ.மீ. அவர்கள் மணவையாரைப் பற்றி,

"திரு. மணவை முஸ்தபாவை ஒரு தனி மனிதராக என்னால் காண முடியவில்லை. அவரை ஒரு இயக்கமா கவே காண்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.

இதே உணர்வின் அடிப்படையில் ‘தாய்’ வார இதழ் தன் தலையங்கத்தில் மணவையாரைப் பற்றியும் அவரது அறிவியல் தமிழ் தொண்டைப் பற்றியும் விவரிக்கும்போது,

"திரு. மணவை முஸ்தபா ஒரு தனி மனிதரல்லர்; இவரே ஓர் இயக்கம். தமிழ் இயக்கத்தைத் தாங்கி வழி நடத்துகிற தனி இயக்கம் இவர். அறிவியல் உலகத்திற்குத் தமிழை அழைத்துவர வேண்டும் என்றுதான் எல்லோரும் சொல்லுகிறோம். சத்தம் சந்தடியே இல்லாமல் அறிவியல் தமிழுக்கு அகல் விளக்கு ஏற்றி வைத்திருக்கிறவர் திரு. மணவை முஸ்தபா. தமிழ் அறிவியல் மொழி என்று அவர் வாதிடுகிறார். இப்படி வாதிடுகிற தகுதி அவருக்கு நிறையவே உண்டு. காரணம் தனி ஒரு மனிதராக அறிவியல் துறையில் பயன்படத்தக்க ஆயிரமாயிரம் தமிழ்க் கலைச் சொற்களைக் கண்டுபிடித்திருக்கிறார். இந்தச் சொற்கள் நீண்டு வளர்ந்து தெரிகிற நகம் போல் இல்லாமல் உருண்டு திரண்டு ஒட்டித் தெரிகிற சதைபோல தமிழின் உயிரே கலந்திருப்பதைப் போல காணப்படுகின்றன. இவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் 'யுனெஸ்கோ கூரியர்' - 'கலைக்