பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகுப்பாசிரியா்

15


எழுதிய 'இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்', மற்றும் 'பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்' என்ற நூலையும் ஆய்வுப் பொருளாகக் கொண்டு கிருஸ்தவப் பாதிரியாரான அருட்டிரு அமுதன் அடிகள் எழுதிய 'மணவையாரின் சமய நல்லிணக்கப்பணிகள்' என்ற கட்டுரை மணவையார் இளம் பருவம் முதலே தான் கொண்டிருந்த சமய நல்லிணக்கச் சிந்தனைகளைச் சிந்தைகொள் மொழியில் எடுத்தெழுதியுள்ளார்.

மணவையாரை நிர்வாக ஆசிரியராகக் கொண்டு கடந்த 32 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் சர்வ தேச திங்களிதழான 'யுனெஸ்கோ கூரியர்' இதழ் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்கை, அதனோடு நீண்டகாலத் தொடர்புடைய இரா. நடராசன் திறம்பட விளக்கியுள்ளார்.

இந்த ஆய்வு நூலுக்கு மிக அருமையான அணிந்துரையை வழங்கியுள்ளார் வார்த்தைச் சித்தர், ஞானபாரதி வலம்புரி ஜான் அவர்கள். மணவையார் மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர். மணவையாரின் அரிய நூலான 'காலம் தேடும் தமிழ்' படைப்பு வெளிவந்தபோது, அந் நூலுக்கு வெளியீட்டு விழாவையும், அந்நூலின் அடிப்படையில் ஒரு நாள் கருத்தரங்கையும் நடத்தியவர். 'யுனெஸ்கோ கூரியர்' இதழுக்கு நடுவணரசில் இடையூறு ஏற்பட்டபோது, மாநிலங்களவையில் அற்புதமாக பேசி, இதழ் தொடர்ந்து வர வழிவகுத்தவர். இதை மணவையார் எப்போதும் நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறார். அவரது அணிந்துரை நூலுக்குப் பெரும் அணிகலனாக அமைந்துள்ளதெனலாம்.

இந்த ஆய்வுத் தொகுப்பு வாயிலாக மணவையார் ஆற்றிவரும் பன்முகத் தமிழ்த் தொண்டை ஓரளவேனும் சுட்டிக் காட்ட உதவும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

தமிழர்களின் எதிர்காலமும் தமிழின் எதிர்காலமும் டாக்டர் கலைஞர் அவர்களைச் சார்ந்தே அமைந்துள்ளது என அழுத்தமாக நம்பும் மணவையார், அன்னாரையே