பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டா் வா சா. பானு நூர்மைதீன்

53


தகராறாகத் தான் கருதிச் செயல்பட வேண்டுமேயன்றி இரு மதத்தாருக்கிடையே ஏற்பட்ட மதச் சண்டையாகக் கருதும் போக்கு ஒழியட்டும்" என்று நீதிபதி அவர்கள் கூறும் கருத்து, விழப்புணர்வு ஊட்டவல்லது. அப்படியல்லாமல் வலிய வலிய இஸ்லாமியர் மீது குற்றச் சாட்டைத் திணிப்பது என்பது, மலரமலர விழித்தாலும் கோட்டானின் விழிப்பு இருட்டுக்குத்தான் சொந்தம் என்பதுபோல் புரட்டும் பொய்யும் பேசத்தான் என்பது தெளிவாகின்றது.

இது தொடர்பாக நூலில் பரவியுள்ள ஆசிரியரின் அருங்கருத்துக்களைக் காண்போம். இன்று, மதத்தை வழி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் போலிச் சமயவாதிகள், சமயப் போர்வையில் சுயலாபம் தேடியலையும் கும்பலாகவே இருக்கின்றனர். இஸ்லாத்தைப் பற்றிய தவறான பிரசாரம் வேறு ஒருபுறம் நிகழ்கின்றது. அதில் ஒன்று “இஸ்லாம், வாளால் பரப்பப்பட்டது” - என்பதே. பி.பி.சி. அறிவிப்பாளர் ரோஜர் ஹார்டி என்பார், "உலகிலேயே மிகத் தவறாக விவரிக்கப்பட்ட, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம்" எனக் கூறும் கூற்று இதனை மெய்ப்பிக்கும். ஆனால் "நாவாலும் கரங்களாலும் தீங்கு விளைவிக்காதவனே முஸ்லிம்" எனும் நபி(சல்) அவர்களின் மொழியை அறிந்திருந்தால், பேச்சாலும் எழுத்தாளும் பிறரைக் காயப்படுத்தாதவன் முஸ்லிம் என உணர்ந்திருப்பர்; இதற்கு ஆசிரியர் காட்டும் சான்று - காஷ்மீரத்தில், கேரளாவில் இஸ்லாமிய மன்னர் ஆட்சியே எக்காலத்தும் இல்லை; இந்துக்களே மன்னர்; ஆனால் அங்கு அதிக எண்ணிக்கையில் வாழ்பவர் இஸ்லாமியரே. எப்படி வாளால் பரப்பப்பட்டிருக்கும் இஸ்லாம்?

தொடக்கத்தில் முஸ்லிம்களே பெருந்தொல்லைக்கு ஆளாகியபோது, தம்மைத் தற்காத்துக் கொள்ள முயன்ற