பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் வா.சா. பானு நூா்மைதீன்

55


கொள்ளுமாறு கேட்டபோதும், தமிழக இஸ்லாமியர், அதனை ஏற்க மறுத்துத் தம் இனம், தம் நாட்டோடு இருந்த கதையை உண்மையான வரலாறு படித்தவர் அறிவார். கஜினியின் படையெடுப்பும் சமயத்தின் பேரால் நடைபெற்ற ஒரு ஏமாற்றைத் தடுக்க வேண்டி நடைபெற்றதே என்பதும் வரலாறு காட்டும் செய்தி. அவன் படைத்தளபதியே திலக் என்ற இந்து. உண்மைகள் இப்படி ஏடுகளில் உறங்கிக் கிடக்க பொய் வீதியுலாப் புறப்பட்டுவிட்டது தான் கொடுமை. அதில் இஸ்லாமியம் தவறாய் இனங்காட்டப்பட்டது. கொடுமையிலும் கொடுமை. இப்படிப்பட்ட சிந்தனை அலையைத் தூண்டும் எழுத்துக் கோலம் மணவையார்க்கு இந்நூலில் வாய்ந்துள்ளது. இந்நாட்டை ஆண்ட இஸ்லாமிய மன்னர்க்கு இஸ்லாமிய நெறிபரப்பும் நோக்கும் இல்லை; அதற்குச் சான்றும் எதுவுமில்லை. பலர் ஐம்பெருங் கடமையைக்கூட நிறைவேற்றாதிருந்தனர். எல்லாம் நிறைவேற்றிய ஒளரங்கசீப் கூட ஹஜ்ஜைப் பிற மன்னர் போன்றே நிறைவேற்றவில்லை. எனவே வாளால் எப்படிப் பரவும் இஸ்லாம்? என்ற ஆசிரியரின் நியாயமான கேள்வி நெஞ்சை நெருடுகின்றது.

'இஸ்லாம் எந்தச் சமயத்திற்கும் எதிரானது அன்று' என்ற நபி(சல்)அவர்களின் நன்மொழியையும் காட்டி, உலகெலாம் நபிமார் வந்து அத்துணை மொழிகளிலும் பொதுச் சிந்தனை தந்தனர் என விளக்குகின்ற ஆசிரியர் மேலும் பல செய்திகளைத் தருகின்றார்.

உலகெலாம் நிறைந்த மனிதர் கூட்டத்திடையே வந்து சொல்லாற்றல் மிக்க நபிமார் பலர் வந்தாரெனினும், முதல் நபிக்குக் கூறப்பட்டதே இறுதி நபிக்கும்தான் என்ற ஒரு மைப்பாடு விளக்கப்படுகின்றது; 500 கோடிப்பேர் பரவிய உலகில் இஸ்லாமிய மக்கள் மட்டும் 100 கோடிப்பேர்கள்.