பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டா் வா.சா. பானு நூா்மைதீன்

57


ரேகைச் சித்தர், ஐதுருஸும், குணங்குடியாருமான சுல்தான் அப்துல்காதர், தக்கலை ஞானி பீர்முகம்மது அப்பா மூவர் அடங்கியிருத்தல்; ஜிஸியா வரி, ஒளரங்கசீப்பால் இந்துக்களின் நலனுக்கும், பாதுகாப்புக்குமாக வசூலிக்கப்படுதல்; அண்டை வீடு யாதெனில். "ஒருவனது வீட்டின் அனைத்துத் திக்கிலும் அமைந்துள்ள நாற்பது வீடுகள் அண்டைவீடுகளாகும்" என்ற பெருமானார் வாக்கும், அண்டைவீட்டாருக்கு அன்பு செலுத்தும் போக்கும் கற்பித்தல்; சமநீதி இஸ்லாம் வழங்குவதற்குச் சான்றுகள்; எம்மதமும் சம்மதம் என்பதைவிட அவரவர்க்கு அவரவர் சமயம் என்பதே சத்தியம், சாத்தியம் என வரையறை செய்தல்; மதச்சார்பற்ற அரசு என்றால் காயிதெ மில்லத் அவர்கள் கூறுவதுபோல் 'எந்த மதத்திற்கும் எதிராகாத, எந்த மதத்தையும் பின்பற்றாத எந்த மதச் செயல்களிலும் தலையிடாத, எதையும் ஆதரிக்காத, எதிர்க்காத நடுநிலைமை வகித்தல்' என்ற அரிய விளக்கம் சுட்டல்; உலக ஒருமைப்பாட்டிற்கே கட்டியம் கூறும் பெருமானார்(சல்) அவர்களின் இறுதிப் பேருரை. உங்கள் இறைவன் ஒருவனே, ஈமானில் ஒழுக்கத்தில் உயர்ந்தாரே உயர்ந்தோர்; நாடோ நிறமோ அதனை நிர்ணயிக்காது; வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நலம்-என்ற இவை போன்ற விலைமதிக்க இயலாக் கருத்துகளின் கருவூலமே இந்நூல். இதுபோன்ற நூல் எல்லாச் சமயத்தாரிடமும், கல்வி நிலையங்களிலும் அங்கம் பெற்றால் பலன் தங்கமாய் விளையும் என்பதில் ஐயமில்லை. நூலாசிரியரின் அரும்பாடு இதில் தெற்றெனத் தெளிவாகின்றது.

II. கட்டுரைத் தொகுப்பு

4. பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம் (1993)

மொத்தம் 22 கட்டுரைகள் இடம் பெற்ற இத்தனிவகைக் கட்டுரைத் தொகுப்பு ஆசிரியரின் மற்றுமொரு