பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். வா.சா. பானு நூர்மைதீன்

63


விருது கொடுக்கும் அளவுக்குக் கண்டு, வியந்து நிற்கின்றோம்.

IV. தொகுப்பு நூல்கள்

6. சிந்தைக்கினிய சீறா

மணவையாரின் இஸ்லாமிய இலக்கியத் தொடர்புடைய தொகுப்பு நூல்கள் நான்கு. உலக நோக்குப் பார்வையுடன் தரமானதைப் பரிந்து தரும் முயற்சிகளுடன், பொறுப்புணர்வும், விழிப்புணர்வும் உடைய தமிழுறவு பூத்த தொகுப்பே இக்கட்டுரைத் தொகுப்புகள்.

இஸ்லாமிய இலக்கியம் ஓர் இனிய பூங்கா. அங்கு வானளாவும் தருக்கள் உண்டு. வள நறுமலர்கள் உண்டு; குளிர்ந்த நீருற்று உண்டு; கொஞ்சும் தென்றல் தவழும்; மயில் ஆடும்; குயில் பாடும். அங்கு சுகந்த மணமலர் பறித்து, இனிய கனிகொய்து, நறுந்தென்றலில் மூழ்கி, காலார உலாப் போகி, கண்ணாரக் காட்சி படைத்து, களி துள்ளும் உள்ளம் கொண்டோராய் உலவப் பிறந்தவரே கலை மனப்பட்ட உலகோர். இவ்விலக்கியங்களின் வழி, இஸ்லாமின் இனிய இதழ் அடுக்குகளை ஒவ்வொன்றும் விரித்தும், உரைத்தும் காட்டி நலம் நாட்டியவரே மணவையார்.

காலம் போகிற போக்கில் தமிழை வாழவைத்து வளப்படுத்தினால் மட்டும் போதாது; அழிவினின்றும் அதை ஆக்க நோக்கிலே காப்பாற்ற வேண்டும் என்ற தார்மிகப் பொறுப்பேற்று புறப்பட்டப் பல சான்றோர் இஸ்லாமிய இலக்கியங்களைக் காவல் காத்தனர். அதிலும் ஒழுக்க இலக்கிய நியதி காத்தனர். ஒழுக்க அடிப்படையில் நற்காப்பியமொன்று உருவாகாதா என்று தத்தளித்த காலத்தில் 15 அருந்தமிழ்க் காப்பியங்கள் உருவாகின; ஒரே இஸ்லாமியப் புலவரே 4 காப்பியங்கள் படைத்தார். புதுமை