பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். வா. சா. பானு நூா்மைதீன்

65


மொழி, நாகரிக, பண்பாட்டடிப்படையில் சாதி, சமய வேறுபாடற்று வாழ்ந்த முற்காலச் சுவடுகளையெல்லாம் நினைவுபடுத்தும் நன் முயற்சிபோல் இவர் தம் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இஸ்லாமியர் என்போர் தமிழிலக்கிய வரலாற்றிலே படியவிருந்த இருளை இரிந்தோட வைத்து, தேக்க நிலையைப் போக்குமுகத்தான், இரண்டாம் இருண்ட காலம் ஒன்று தமிழகத்தில் தலை தூக்கா வண்ணம் தொண்டாற்றிச் , சிறந்ததைக் கட்டுரை ஆசிரியரின் தொகுப்புப் பணி நினைவூட்டுகிறது.

காதற் சுவை மலிந்த படைப்புகளாக அல்லாமல் ஒழுக்கிக் காப்பு இலக்கியமாகப் படைத்து ஒரு மாற்றம் செய்தனர் என்பதைச் சீர்தூக்கி நிறுத்துகிறார். இலக்கியங்களிடையே வேற்றுமையில்லை என எல்லாத் தரத்து மக்களையும் ஒருமுகப்படுத்தி ஒற்றுமை காண வைத்துள்ளார். இஸ்லாம் என்பது வாளால் பரப்பப்பட்டது, அன்று; வார்த்தைகளால் பரப்பப்பட்டது என்பதற்கு ஆசிரியரின் ஐக்கியப் படுத்தலே சாட்சி. டாக்டர் சி.பா., இரா.முத்துக் குமாரசாமி, பேராசிரியர்கள் க.ப. அறவாணன், கிருஷ்ணா சஞ்சீவி, மயிலை சீனி வேங்கடசாமி, சிலம்பொலி செல்லப்பனார் போன்றோர் இவ்வரிசையில் இடம்பெற்று கண்ணியப்படுத்தப்படுவர்.

இஸ்லாமியர்களே இவ்விலக்கியப் பெருமை பேசுவதைகூட மாற்றுச்சமயத்தார் அளிக்கும் பாராட்டுப் பார்வை பெரிதும் கண்ணியத்திற்கும், களிப்பிற்கும் உரியதாகின்றது. குறிப்பாக டாக்டர் அறவாணன், காவியத்தில் பரவிக்கிடக்கும் அரபு பாரசீகச் சொற்கள் கலைஞனின் பார்வையில் சுமைதான் எனினும், மேலே அழுத்தமான தோல் இருக்கிறது. என்பதற்காகப் பலாப்பழத்தைவிட்டு விடுகிறேமோ? பல்லை உடைக்கும் கணுக்கள் இருக்கின்றனவே

5