பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி


மலர்ந்த இந்நூலில், டாக்டர் இராமனாதன், மெளலவி சிராஜ் பாக்கவி, டாக்டர் எம்.எம்.உவைஸ், சிலம்பொலி செல்லப்பனார், ஹஸன் ஆகியோர் கட்டுரை ஆசிரியர்களாக வலம் வருகின்றனர். நூற்செய்திகளுடன், இவர்கள் அளித்துள்ள செறிவான பிற செய்திகள் இந்நூலின் செவ்விய கொடையை நமக்குத் தருகின்றது. அவை வருமாறு:

இசைமொழியாம் அரபிமொழியில் மறைபெற்ற இஸ்லாம் இசைக்கு விரோதமானதல்ல; இன்னும் கூறப் போனால் இயற்கையின் இயக்கமே ஓசை, ஒலி. அது பரவாத இடமேயில்லை. நீணிலத்தில் இறைநலம் மனிதனால் மறுக்க முடியா ஒன்று. தொடக்கக் காலத்தில் மனிதனுக்கு வழிகாட்ட மேம்பட்டது; பற்பல மறைகள் பற்பல இசைத் தூதர் வாயிலாக அருளியதில், தாவூத் நபியவர்களுக்கு யுனானி மொழியில் அருளப்பட்ட 'ஜபூர்' என்ற வேதமே, இசையாக இசைத்து மக்களுக்குப் போதிக்கும் வண்ணம் ஏற்பட்டது; வேதம் முழுக்க உரைநடையில் இல்லாமல் முழுதும் இசை வடிவக் கீர்த்தனைகளாய் வழங்கியதில் இருந்தே, இசைக்கு மக்கள் மதிப்புக் கொடுத்த காலத்தில், மக்கள் விருப்பம்போல் மறையை இறைவன் இசை வடிவாக வழங்கி இசையை அங்கீகரித்த தன்மை அறிய நேரிடுகின்றது. தாவூத்நபி இசைக்க, மக்களும், விலங்குகளும், பறவைகளும் மெய்ம்மறந்து கேட்டிருந்த தன்மையைக் கேட்ட போதே, இஸ்லாம் இசையை எதிர்ப்பதாகச் சொல்வது முற்றிலும் முரணானது என அறிய நேரிடுகின்றது; ஆய்வறிவு இல்லாது போனதையே சுட்டுகின்றது. நற்கவிஞர்கள் பலர் அரபு மொழியில் பாக்கள் வழங்கியும், பலர் கூடும் இடங்களில், காபாவில் எழுதித் தொங்கவிட்டுமிருந்தனர் என்ற செய்திகள் இடம் பெறுகின்றன.

மேலும், குர்ஆனை மனங்கலந்து ஓதும்போதே இனிய நாதம் மேலெழும்ப அதைக்கேட்ட ஒட்டகம்