பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். வா.சா. பானு நூர்மைதீன்

89


டம்போல் கற்ற கல்விக்கேற்ப மனம் உயரும்? மாறாக இன்று பண்பு அடிப்படையிலான செவ்வியல் இலக்கியங்களின் பரிச்சயம் அற்றுப் போனதால்தானே, சிந்திக்கும் செம்மை மறந்து, பாரினில் மேன்மை அடைதற்கு மாறாக எங்கும் கவலை, குழப்பம், மிடிமை, மிரட்டல், வெடி குண்டு, துப்பாக்கிக் கலாச்சாரங்கள், மதங்களின் பெயரால் மதங்கொண்டு மார்க்கத்தை அனுசரிக்காத தன்மை, அதனால் அன்றாடம் பலியாகிச் சரிகின்ற சாவுகள், அதற்காக ஊரைக் காலிசெய்து கொண்டு ஓடும் கண்ணிர் ஓடங்கள், அதன் விளைவால் நாட்டில் உண்டாகும் தொழில் முடக்கம், அரசாங்க ஆட்டம், ஆலையடைப்பு, பொருளாதாரத் தேக்கம், பட்டினிச்சாவு, இதனால் சொந்த நாட்டிலேயே அகதி முத்திரை குத்திய முகம்-இவையெல்லாம் விளையக் காரணமே நாட்டில் நேரிய இலக்கியமில்லாததும், நேசம் மறந்த நெஞ்சங்களும் அல்லவா என்ற சிந்தனை அலைகளை ஒன்றன்பின் ஒன்றாய் எண்ணத்துண்டுவது மணவையாரின் எழுத்துக் கோலம். எல்லோரும் கவனிக்கின்றோம், ஆனால் எல்லாவற்றையும் கவனிப்பதில்லை. இந்த எழுத்தாளன் எல்லாவற்றையும் காரியப் பார்வையுடன் நோக்கும் காவல்காரர் ஆகிறார்.

ஆசிரியர் அவர்களின் இஸ்லாமிய இலக்கியப் பணி, இஸ்லாத்துக்கு ஆற்றும் சிறந்த தொண்டன்றோ? தூய இஸ்லாமியன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குக் கவிஞர் நசுருல் இசுலாம், ‘வையக மீதினில் வாழ்விலும் தாழ்விலும் இன்பமே வரினும்', துன்பமே நேரினும் ஒன்றாய்ப் பங்கு உவந்து பற்றும் சோதரர் நீ எனச் சாற்றுவது இஸ்லாம்’ என்ற மனிதநேய மாண்பினை விளக்குவார். அதற்கேற்ப மானுட நேயம் கொண்டவராய் இறைவேதம், நபிவேதம் ஆகியவற்றால் அரும்பெருமையை மனித குலத்தார்க்கி