பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியம் கண்ட அறிவியல் 12?

'அண்டங்கள் எல்லாம் அணுவாக

அணுக்கள் எல்லாம் அன்டங்க ளாகப் பெரிதாய்ச்

சிறிதாயி னானும் அண்டங்கள் உள்ளும் புறம்புே

கரியாயி னானும் அண்டங்கள் ஈன்றாள் துணை என்பர்

அறிந்த நல்லோர்’**

என்று அநுபவ இயலாகக் கூறியுள்ளமை கண்டு மகிழத் தக்கது. இன்னும் கம்பராமாயணத்தில் கதிரவன் மகர ரேகைக்குத் தெற்கே செல்லுவதில்லை என்பது மிகச் சமத்காரமாகக் கூறப்பெற்றுள்ளது, இது பாடல்:

'முன்னம் யாவரும் இராவணன்

முனியும்னன்(று) எண்ணி பொன்னின் மாநகர் மீச்செலான்

கதிர் எனப் புகல்வார்; கன்னி ஆரையின் ஒளியினில்

கண்வழுக்(கு) உறுதல் உன்னி நாடொறும் விலங்கினன்

போதலை جميعarrrrri"2 ة* (முனியும்-கோபிக்கும்; கதிர்-பகலவன்; ஆரை-மதி;ை விலங்கினன்-விலகிச் சென்றான்.)

பகலவன் மகரரேகைக்குத் தெற்கேயும், கடக ரேகைக்கு வடக்கேயும் நகர்வதில்லை என்பது வானநூல் மெய்ம் மையாகும். இலங்கை மகர ரேகைக்குத் தெற்கேயுள்ளது. என்பதை நாம் அறிவோம். 'இராவணன் சினத்திற்கு

11. திருவிளையாடல் புரா. பாயிரம்.6. 12. கம்பரா. சுந்தர. ஊர்தேடு. 21.