பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியம் கண்ட அறிவியல் 129

ஒன்றும் கிடைக்கவில்லை. இதனை இலக்கியங்களுள் காணப்பெறும் ஒரு சில குறிப்புகளால் ஊகிக்கலாமேயன்றி அறுதியிட்டு உரைத்தற்கில்லை.

இன்று அமெரிக்கா போன்ற மேனாடுகளிலுள்ள பெரிய நகரங்களில் விண்ணை முட்டும் பல்லடுக்கு மாளிகை கள் கட்டப்பெற்றுள்ளன என்று அறிகின்றோம். சென்னை போன்ற நகரங்களில் பெரிய கட்டடங்களைப் பார்க்கும் நமக்கு இத்தகைய மாளிகைகளின் இருப்பை ஒருவாது ஊகிக்கலாம். இத்தகைய மாளிகைகள் இலங்கை மாநகரில் திகழ்ந்தன என்பதைக் கம்பன் காட்டுவன்.

'பொன்கொண்டுஇழைத்துமணியைக்கொடு பொதித்த மின்கொண்டு இழைத்த வெயிலைக்கொடு சமைத்த என்கொண்டு இயற்றிய எனத்தெரி கிலாத வன்கொண்டல் தாவி மதிமுட்டுவன மாடம்.'"

இயல்பில் பொன்னால் செய்யப்பெற்று மணிகள் பதிக்கப் பெற்றுள்ள முகில் மண்டலத்திலும் மேலாக உயர்ந்து திங்கள் மண்டலத்தையும் எட்டும் மாடமாளிகைகள் ‘மின் கொண்டு இழைத்தனவோ? வெயிலைக் கொண்டு சமைத்தனவோ? இன்னபடிதான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாமல் திகைக்கும்படி இருந்தன என்று கவிஞன் கூறும்பொழுது அக்காலத்துக் கட்டடப் பேரறிஞர் களின் திறமையை ஒருவாறு விளக்குகின்றது என்பதனை அறிகின்றோம்.

உயிரியல்: இன்று டார்வின் போன்ற அறிஞர்களால் குறிப்பிடப் பெறுவது கூர்தல் அறம் (Theory of evolution) என்ற கொள்கையாகும். இக் கொள்கை பற்றி இன்னும்

13. கம்பரா. சுந்தர ஊர்தேடு. 1.