பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியம் கண்ட அறிவியல் 13]

ஆகாயம் அஞ்சஅகன் மேருவை அணுக்கு

மாகால வழங்குசிறு தென்றல்வர கின்ற.'

(அணுக்குதல் - வருத்துதல்; மாகால் . பெருமையை உடைய காற்று; வழங்கு இனிதாக அளிக்கப் பெறுகின்ற..! என்பது கம்பன் வாக்கு. மிக்க வலிமையையுடைய காற்றுக் கடவுளும் இராவணனிடத்து அச்சத்தால் அடங்கித் தென்றலாக இனிது வீசப் பெற்றிருந்தனன் என்று கவி சமத்காரமாகக் கூறுவதை அறிக. அறிவியல் கருத்து ஈண்டு மிக நயமாகக் கூறப்பெற்றுள்ளது.

மருத்துவ இயல் தமிழ் இலக்கியத்தில் மருத்துவ இயல் பற்றிய செய்திகளையும் சிகிச்சை முறைகளையும் காணலாம். திருக்குறளிலுள்ள மருந்து என்ற அதி காரத்தில் நோய்கள் வருவதன் காரணங்களையும் அது வராது தடுக்கும் முறைகளையும், அது வந்தால் தவிர்க்கும் வழிவகைகளையும்பற்றிய செய்திகள் தரப்பெறுகின்றன.

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்’**

என்பது வள்ளுவப் பெருமானின் கூற்று. நோய் வருவ தன் காரணத்தையும், நோய் இன்னதென்பதையும் ஐயமறத் துணிந்து மருந்து செய்தல், உதிரங்களைதல், அறுத்தல், கடுதல் முதலிய முறைகளை மேற்கொண்டு அந்நோயைப் போக்க வேண்டும் என்பது பண்டைய மருத்துவ முறையாகும். இன்றைய மருத்துவ முறையும் இதனையொட்டியே உள்ளது. இங்கணமே, நோயுற்றவன் வயது முதலியற்றையும் அவனுடைய வேதனை, வலி முதலியவற்றையும், காலவேறுபாடுகள் முதலியவற்றையும் நோக்கிச் சிகிச்சை செய்தல் வேண்டும். இதனை,

15. கம்பரா. சுந்தர-ஊர்தேடு.2. 16. குறள்-948