பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#36 அறிவியல் தமிழ்

வில் செல்வோர் உணர்ந்துகொண்டு செயல்படுவதைப் போல், பெற்றோரும், குழந்தைப் பராமரிப்பில் பங்கு கொள்ளும் மற்றோரும் குழந்தை தன் அழுகை ஒலியால் புலப்படுத்துவதைப் புரிந்துகொண்டு அதற்கு வேண்டிய நலன்களை நல்கி, அதன் தேவைகளை நிறைவு செய் கின்றனர். பேருந்து ஒட்டுநர் ஒலிப்பான்மூலம் தரும் ஒரே ஒலிக்குப் பல பொருள்கள் உண்டு. நடுச்சாலையில் நடந்து செல்வோர் ஒலியைக் கேட்டு "ஒரமாகப் போ” என்பதாக உணர்ந்து ஒதுங்கி ஒரமாகச் செல்கின்றனர். முன்னால் செல்லும் வண்டி ஒட்டுநர்கள் முன்னால் செல்வதற்கு இடங் கொடு என்பதாக உணர்ந்து இடப்புறமாக ஒதுங்கி வண்டி முன் செல்வதற்கு இடம் தருகின்றனர். விளையாட்டில் மனம் ஒன்றிப் பட்டம் விடும் சிறுவர்களும், பம்பரம் ஆடும் பாலர்களும் ஒலிப்பான் ஒலியைக் கேட்டுப் "பேருந்து வருகிறது என்பதாக உணர்ந்து அதற்கு வழி விடுகின்றனர்; தம்மையும் ஆபத்தினின்றுக் காத்துக்கொள் கின்றனர். இங்ங்ணமே குழந்தையும் பால் நினைந் தாட்டாத தாய்க்குத் தனக்குப் பால்வேண்டும் என்பதை அழுகையால் புலப்படுத்துகின்றது. சிறுநீர்விட்டு ஆடை களை நனைத்துக்கொண்டு குளிரினாலும், பிற அசெள கரியங்களாலும் துன்பப்படும் குழந்தை அழுகின்றது. அருகில் இருப்போர் அழுகையைக்கேட்டு ஆடைகளை மாற்றி அதன் தேவையை நிறைவு செய்கின்றனர். சில சமயம் குழந்தையைப் பெற்ற அன்னை குழந்தையைச் சிறிது நேரம் மறந்து, அக்கம்பக்கத்தாரிடம் ஸ்வாரஸ்ய மாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கும்போது "தனிமையால் வாடும் குழந்தை "வீர், வீர்” என்று கத்து கின்றது. அன்னை வந்து அதனை அணைத்துக்கொண்டு படுத்ததும், அழுகையை நிறுத்தி ஆனந்தமாக உறங்கத் தொடங்குகின்றது குழந்தை.