பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணுவில் ஆனந்தக் கூத்து 47

     "செகத்தையெல்லாம் அணுவளவும்
         சிதறா வண்ணம்                           
      சேர்த்து அணுவில் வைப்பை; அணுத்
         திரளை யெல்லாம்                                 
      மகத்துவமாப் பிரமாண்ட
         மாகச் செய்யும்                           
      வல்லவா நீ நினைத்து
         வாறே யெல்லாம்"8

என்று இரத்தினச் சுருக்கமாக விளக்குவர். இந்த உண்மையினையே இன்றைய அறிவியலறிஞர்கள் புலன் உணர்வைப் பன்மடங்கு பெருக்கும் கருவிகளைக் கொண்டு உணர்த்தினர். நாம் காணும் பொருள்கள் யாவும் அணுத்திரளேயன்றி வேறொன்றுமில்லை என்பதை விளங்க உணர்ந்தனர். இதனையே அம்பலத்தில் ஆடும் ஆனந்தக் கூத்து விளக்குகின்றது. அணுவிலும் இந்த ஆனந்தக் கூத்தையே நாம் காண்கின்றோம்.

         பூதங்கள் ஐந்தாகிப்
             புலனாகிப் பொருளாகிப்                  
         பேதங்கள் அனைத்துமாய்ப்
             பேதமிலாப் பெருமையனைக்          
         கேதங்கள் கெடுத்தாண்ட
             இளரொளியை மரகதத்தை           
         வேதங்கள் தொழுதேத்தும்
             விளங்குதில்லை கண்டேனே."           என்பது மணிவாசகப் பெருமான் கண்ட காட்சி யாகும்.
     6. தாயுமானவர் பாடல்-தந்தை தாய்-6,               
     7. திருவாசகம்-கண்டபத்து-10,