பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவியல் தமிழ்

97

இன்று அரசு நூல்களை வெளியிடும் பொறுப்பைத் தானே மேற்கொண்டு வருகின்றது. இதனால் நூல்கள் ஒருகால் சற்று மலிவாகக் கிடைக்கலாம். ஆயினும், இத்திட்டத்தால் அகத்தோற்றத்திலும், புறத்தோற்றத்திலும் செய் நேர்த்தியிலும் வளரும் திறன் இல்லாமல் போய் விடுவதற்கு ஏதுவாகும். தகுதி வாய்ந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில் விழிப்புடன் இருத்தல் வேண்டும்.

கல்லூரிக் கல்வி மட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இடைநிலை வகுபபுக்கான (intermediate) சில அறிவியல் பாட நூல்களை வெளியிட்டுள்ளது. ‘நவீன அசேதன இரசாயனம்’ (Modern Inorganic Chemistry) (2 பகுதிகள்) (1938, 1941), பெளதிக நூல் (Physics) (2 பகுதி கள்) (94:) எனற நூல்களை வெளியிட்டுள்ளது. தொடக்க நிலையாதலால் இவற்றில் நல்ல ஆற்றொழுக்கான நடை அமையவில்லை; கலைச் சொற்களும் நன்கு செப்பம் பெற வில்லை. கல்லூரி மட்டத்தில் தாய்மொழி பயிற்று மொழியாகப் புகுத்தப் பெறாமையால் இதற்குமேல் அப்பல்கலைக் கழகம் அறிவியல் நூல்களை வெளியிடுவதில் ஊக்கம் காட்டவில்லை.

கல்லூரிகளில் தாய்மொழி பயிற்று மொழியாக அமைதல் வேண்டும் என்ற கொள்கை அண்மையில் மேற் கொள்ளப்பெற்றது. கடந்த பத்தாண்டுகளாக இத்துறையில் நூல்களை வெளியிடும் பணியைத் தமிழக அரசே மேற்கொண்டு புகுமுக வகுப்பு இளங்கலைப் படிப்பு மட்டங்களில் பல்வேறு துறைகளில் முதல் நூல்களையும் மொழி பெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டு வருகின்றது. இன்று வரையிலும் இருநூறுக்கு மேற்பட்ட நூல்கள் வெளி வத்துள்ளன. ஆசிரியர் கல்லூரி மாணவர்கட்கு ஒரு சில நூல்கள் வெளியிடப் பெற்றுள்ளன. ஆனால், இத்துறையில் அரசு வெளியிடுவதற்கு முன்னதாகவே சில தனியார் துறைகள் சிவ நூல்களை வெளியிட்டுள்ளன. இவற்றுள்