பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

99


மிக்கவர்கள் : வேள்வியால் விரும்பிய பலனை என்பதும், அவற்றால் தெய்வங்களில் ஆற்றல் நின்று என்பதும் இவர்தம் அதிராத நம்பிக்கை

2(அ) க. வேதாந்தம் : பிரஸ்தானதிசயம் புகட்டுகின்ற கோட்பாடுகளையெல்லாம் தொகுத்து வேதாந்தம் என்று கூறுவது முறை.வேதாந்தத்தினுடைய அந்தம் அல்லது முடிவு வேதாந்தம். இம்மை என்று துவலப்பெறும் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றியும், மறுமை எனப்படும் கவர்க்கம், மோட்சம் (வீடுபேறு) ஆகியவற்றைப் பற்றியும் பகர்வது. வேதம். இந்தக் கோட்பாட்டை வேறு விதமாய்க் கூறினால் இத்திரியங்கள் மூலம் நுகர்கின்ற அகில வாழ்க்கையைப்பற்றிப் பேசுவது. வேதம். இந்திரியங்களுக்கும் மனத்திற்கும் அப்பாற் பட்ட பரத்தைப் பற்றிப் புகட்டுவது, வேதாந்தம். இந்திரிய வாழ்க்கையைத் தியாகம் செய்தால் ஒழிய பரம் என்னும் நிலை கைவரப்பெறாது.

நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் தோன்றியுள்ள எல்லாச் சமயங்களின் அடிப்படைத் தத்துவங்களை வேதாந்தத்தில் காணலாம். வேதாந்தத்தில் இல்லாத கோட்பாடு உலகில் எந்தக் சமயத்திலும் இல்லை என்று உறுதியாய் உரைக்கலாம். ஆகவே, சமயங்களுக்கெல்லாம் தாய்ச் சமயமாய் இருப்பது, வேதாந்தம். மெய்ப்பொருளுக்கு எப்பெயர் இட்டு அழைப்பதும் வேதாந்தத்திற்கு உடன்பாடு. பெயரையும் விளக்கத்தையும் முன்னிட்டுச் சமயங்கள் சண்டையிட்டுக்கொள்கின்றன, அடிப்படையில் உள்ள கோட்பாட்டைக் காணுமாறு தூண்டுவது, வேதாந்தம். வேட்கையைத் தனிப்பது ஜலமா, தன்னிரா, நீர்த்தமா, பானியா, வெள்ளமா என்று வாதாட வேண்டா.ஜலம், தண்ணீர், தீர்த்தம், பாணி, வெள்ளம் என்ற சொற்கள் குறிக்கும் பொருள் யாது என்பதை ஆராய்ந்து பார்த்தலே அறிவுடைமை. இப்படி நோக்கினால் வேற்றுமையும் வீண் வாதமும் ஒடுங்கும். மனிதன் அடையும் மேலான நிலை ஐயம் திரியின்றிப் புலனாகும். வேதாந்தம் இதற்கு வழி காட்டுகின்றது.

வேதாந்தத்தில் அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம் ஆகிய மூன்று தத்துவங்கள் தோன்றியுள்ளன. அவற்றைச் சுருக்கமாய் அறிந்துகொள்வோம்.