பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

111


உரியன என்று மேலை நாட்டு இந்தியத் சிந்தனையாளர்கள் (Indologists) ஆய்ந்து கூறிய முடிவு.

ஆசீவகரின் நியதிக் கொள்கையின் கருத்து ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (புறம் - 192) என்ற கணியன் பூங்குன்றனாரின் புறப்பாடலில்,

“தீதும் நன்றும் பிறர்தர வாரா
..................................
கல்பொரு திரங்கும் மல்லற்பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் (அடி 28-11)

என்ற அடிகளில் காணலாம். இவ்வடிகளில், ஓடும் வெள்ளத்துடன் ஒத்தோடும் மிதவையினை, நியதிப்படி செயலாற்றும் உயிர்க்கு உவமையாய்ச் சொல்லப்பட்டிருத்தல் காணத்தக்கது. நியதியை ‘முறை’ என்று அழகு தமிழால் சுட்டுவது நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. மனிதச் செயல்கள் நியதியாய் முடிவு கட்டப்பெறுபவை என்பதும், நியதியை மீறியோ எதிர்த்தோ செல்லுதல் இயலாது என்பதும் இவ்வுவமையால் கவிதைச்சுவை கொப்புளிக்கக் கணியன் பூங்குன்றனார் தெளிவுறுத்தல் அறியப்பெறும்.

(iii) சுபாவக் கொள்கை : இக்கொள்கையும் ஆசீவகர்க்குரியது. அண்டம் சுபாவத்தால் தோன்றப்பெற்றது என்றும் ஒவ்வொன்றும் சுபாவம் ஒன்றனால்தான் வெளிப்படும் என்னும் ஆசீவகர் கருதினர். மனித முயற்சி பயனற்றது என்பது இவர் தம் உறுதிப்பாடு. இதனால் ஆசீவகம் மனித முயற்சியைப் புறக்கணித்தது என்று கருதுதல் கூடாது. மனிதன் தான் ஆற்ற வேண்டிய கடமைகளைப் புரிந்துகொண்டுதான் இருத்தல் வேண்டும்; ஆனால், அவையெல்லாம் இயல்பாய் நிகழ்வன என்று எண்ணுதல் வேண்டும். சுபாவ வாதத்தைத் தமிழ்ச் சமயக் காப்பியமாகிய சீவகசிந்தாமணியில் காணலாம்.

(iv) உய்யும் வழி : பிறப்பு இறப்புகளினின்றும் உய்வதற்குரிய ஆசீவக முறை ‘சம்சார சுத்தி’ என்று குறிக்கப்பெறும் (பாலிபிடகம்). “உய்தி பெற குறுக்கு வழி இல்லை.