பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

119



பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள்
விண்ணவன் வேத முதல்வன் விசைத்தொனி
ஒதிய வேதத்து ஒளியுறின் அல்லது
போதார் பிறவிப் பொதியதையோ.........'4?

எனக் கவுந்தியடிகளுக்குத் தெளிவுறுத்தல் காணலாம். இத்தியத் தத்துவங்களுள் பலவும் அவா அறுத்தலை விடுதலைக்கு வழியாய் வகுத்திருத்தலின் இக்கருத்தின் பொதுமை உணரப்படும்.

மானிடர் வீடுபேறு அடைய வேண்டுமாயின், புதிய கன்மங்கள் மேலும் சேர விடாதபடி செய்யவும், சேர்ந்த கன்மங்களைக் கழிவு செய்யவும் முற்பட வேண்டும். முன்னதைச் சமணர்கள் 'சமுவரம் என்பர்; பின்னதை "திர்ச்சரம் என்து வழங்குவர். வீடுபேற்றை அடைய (1) சரியான கொன் கை (சம்யக் தரிசனம்), (2) சரியான ஞானம் (சம்யக் ஞானம்), (3) சரியான சீலம் (சம்யக் சாரித்திரம்), (4) சரியான தவம், (5) சரியான விரியா சாரம் என ஐவகை ஆசாரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். முதல் மூன்றும் 'திரி ரத்தினங்கன்’ என வழங்கப்பெறும். சரியான சீலத்தைப் பெற ஐந்து விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். இவை தனித்தனியே துறவிகளுக்கென்றும் இல்லறத்தார்க்கென்றும் (சம்சாரிகன்) அறுதியிடப் பெற்றுள்ளன. இவை முறையே மகாவிரதம், அனுவிரதம் என்று உரைக்கப்பெறும்.

சாவக நோன்பு : சமணச் சான்றோர் கூறுவன அத்தைக் கேட்டு நடப்பவர், சிராவகர்; இவர்கள் இல்லறத்தார். சிராவகர் என்ற சொல் பாகதச் சிதைவாய்ச் சாவகர் எனத் தமிழின் வழங்கும். இவர்களுக்குரிய அணுவிரதங்கள் சாவக நோன்பு என்று வழங்கப்பெறும். இவை உலக வாழ்க்கையை ஒட்டி திற்றலின் உலக நோன்பு என்று வழங்குதலும் உண்டு. இவர்களைச் சாவக மாக்கள் (15:195), சாவக நோன்பிகள் (16:18), உலக நோன்பிகள் (10:24, 15:153) எனச் சிலம்பு செப்பும். இவர்கட்குரியது சாவக நோன்பு. இதில் கொல்வாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறன்மனை விரும்பாமை, பொருள் வரைதல் (தேவைக்குமேல் பொருள் சேர்க்காமை), கள்ளுண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை, இரவுண்ணாமை, குரவரைப் பணிதல் என்ற பத்தும் அடங்கும்.


42. சிலம்பு - 10 : (188-9)