பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்



இவர்களை வழிபடுவோர் கோரிக்கைகளை முன்வைத்து விண்ணப்பிப்பதில்லை; வரம் வேண்டுதலும் இல்லை. இவர்தம் நிலையினைத் தாமும் பெறுவது ஒன்றே வழிபடுவோரின் குறிக்கோளாகும். சமணர்கள் வழிபடும் 'கடவுள்' இவர்கள்தாம். தனித்தத்துவமாய்க் கடவுளை அவர்கள் ஏற்பதில்லை.

கிறித்துப் பெருமான் பிறப்பதற்கு முன்பு (சுமார் கி.மு. 560) வர்த்தமானர் என்பவரால் சமண தத்துவம் விளக்கப்பெற்றது. மகாவீரர் என்பவரும் இவரே. ஆனால், இவர் காலத்திற்கு முன்பே சமணத்தத்துவம் வழக்கில் இருந்திருப்பதாய் வரலாற்றறிஞர்கள் கூறுவர்.

(4)பௌத்தம் : பௌத்த சமயம் பாரத நாட்டுப் பழம்பெரும் சமயங்களுள் ஒன்று. இது நம் நாட்டில் தோன்றியதானாலும் இங்கு பின்பற்றப்பெறாமல் பிற நாடுகளில் நன்கு பரவி வழக்கிலிருப்பது. இது கௌதம புத்தரால் நிறுவப்பெற்றதாய்ச் சொல்லப்பெற்றாலும். (சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்) அவருக்கு முன்னதாகவே பல புத்தர்கள் இருந்திருப்பதற்குச் சான்றுகள் உள்ளன. அப்பெருமக்கள் கூறிய தத்துவங்களை ஒருமைப்படுத்தித் தம்மிடம் உதித்த ஞான ஒளியினால் விளக்கம் தந்தவர், புத்தர் பெருமான். புத்தரே இச்சமயத்தை நிறுவியதாய் ஏற்றுக்கொள்ளப்பெற்ற கருத்தும் உண்டு.

இஃது ஒரு காலத்தில் தமிழகத்தில் நன்கு வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று ஊகிக்க இடம் உண்டு. மணிமேகலையை இயற்றிய கூலவாணிகன் சாத்தனார் இயற்றிய பாடல்கள் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை என்னும் எட்டுத்தொகை நூல்களில் காணப்பெறுகின்றன. இனம் போதியார் இயற்றிய ஒரு பாடல் நற்றிணையில் (பாடல் 72) காணப்பெறுகின்றது. திருக்குறளிலுள்ள ‘ஆதிபகவன்’, ‘அறவாழி அந்தணன்’, ‘வாலறிவன்’, ‘மலர்மிசை ஏகினான்’, ‘ஐந்தவித்தான்’, ‘எண்குணத்தான்’ ‘பற்றற்றான்’, ‘வகுத்தான்’ என்பன போன்ற சொற்கள் புத்தரைக் குறிப்பதாய் ஆய்வாளர்கள் கூறுவர்[1]. திருக்குறள் கருத்தாகிய கொல்லாமை, கள்ளுண்ணாமை, பொய்யாமை, கள்ளாமை போன்ற கருத்துகள் பெளத்த சமயத் தாக்கத்-


  1. 46. கந்தசாமி, சோது.(டாக்டர்) : தமிழும் தத்துவமும் (மணிவாசகர் வெளியீடு).