பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/144

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

130

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


யெலலாம் விசிட்டாத்வைதம் ‘அசித்து’ என்ற தத்துவத்திலும், ‘சைவ சித்தாந்தம்’ ‘பாசம்’ என்ற தத்துவத்திலும் அடக்கி விளக்கும் மேலும், ‘அசித்து’ எம்பெருமானுக்கு உடலாய் இருப்பதாய் வைணவம் பேசும். இதனைச் ‘சரீர-சரீரி பாவனை’ (உடல் - உயிர் - உறவு) என்று வழங்குவர்.

(3) அணுவின் அமைப்பு : அணுவின் அமைப்பையும் நோக்குவோம். அணு மிகமிக நுண்ணிய துகள். பேராற்றல் வாய்ந்த நுண்பெருக்கியால் (Microscope) காண முயன்றாலும் அது நம் ஊனக் கண்ணுக்குப் புலனாகாது. அரைக்கோடி அணுக்களை அணிவகுத்து நிற்க வைத்தால், அவை நாம் எழுதும் போது இடும் முற்றுப்புள்ளியில் அடங்கிவிடும். எனினும், அறிவியல் அறிஞர்கள் மிகச்சிறிய அணுவின் அளவினையும் கணக்கிட்டுள்ளனர். ஓர் அங்குலத்தினை இருபத்தைந்து கோடிகளாய்ப் பங்கிட்டால் கிடைக்கும் அளவே அணுவின் குறுக்களவாகும் என்று கண்டுள்ளனர். பெரிய அணுவின் குறுக்களவு இதனை விட இரண்டரை மடங்கு பெரியது அ.தாவது, ஓர் அங்குலத்தினைப் பத்துகோடியாய்ப் பங்கிட்டதில் ஒரு பங்காகும். இதனை ஓர் எடுத்துக்காட்டால் விளக்கலாம். ஒரு திராட்சைப் பழத்திலுள்ள ஒவ்வோர் அணுவும் ஓர் அங்குல விட்டமுள்ள பந்துபோல் பெருக்கமடைவதாய்க் கற்பனை செய்துகொண்டால், அந்தத் திராட்சைப்பழம் நம் பூமியளவு உப்பிப் பெருக்கமடைந்துவிடும். இன்றைய அறிவியலறிஞர்கள் அணுவின் எடை, அதன் அகலம், நீளம், கனம், அமைப்பு, இனம், ஆக்கப்பாடு, அழிவாற்றல் முதலிய அனைத்தையும், ஆய்வகத்தில் ஆய்வுக்கருவிகளைத் துணையாய்க் கொண்டு அறுதியிட்டுள்ளனர். அணுவின் நுட்பம் முழுவதையும் அறிந்தால் இயற்கையின் இரகசியம் முழுவதையும் அறிந்து கொள்ள முடியும். வைணவ ‘அசித்தும்’ சைவ ‘பாசமும்’ தெளிவாகும்.

அணுவின் நுட்பத்தை இன்னொரு விதமாகவும் விளக்கலாம். ‘மகிமா’ என்பது எண்வகைச் சித்துகளுள் ஒன்று; அது விருப்பம் போல் ஓர் உருவத்தைப் பருக்கச்செய்யும் ஒருவகைப் பேராற்றல். அணுவினை அண்டமாக்கும் மகிமாச்சித்து விளையாடும் ஒருவரிடம் மிகச்சிறிதாயுள்ள நீரிய அணு (Hydrogen atom) ஒன்றனையும் பந்து ஒன்றனையும் கொடுத்தால், அவர்