பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

137




"வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன். பசியினால் 'இளைத்தோ
வீடுதோ நிரந்தும் பசியாரா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைந்தேன்

என்று எல்லோர்மீதும் கருணை காட்டுவார்.

எனவே, ஆராய்ந்து பார்த்தால் இப்புவியிலுள்ள பிராணிகள் அனைத்தும் பகலோனிடமிருந்து ஆற்றலைப் பெறுகின்றன என்பது வெள்ளிடை மலையென அறிகின்றோம். இதன் அறிகுறியாய்த்தான் தமிழர்கள் பொங்கல் விழாவைக் கொண் டாடுகின்றனர். ஆந்திர வேளாண் மக்கள் பெத்த பண்டுக! (பெரிய பண்டிகை) என்று சிறப்பாய்க் கொண்டாடுகின்றனர்.

(7) கதிரவனின் தேங்கிய ஆற்றல் : தாவரங்கனின் ஒவ்வோர் அணுவிலும் கதிரவனிடமிருந்து வரும் ஆற்றல் அடங்கிக் கிடக்கின்றது. இத்த ஆற்றல்தான் பூமியிலிருந்து கிடைக்கும் நிலக்கரியிலும் மண்ணெண்ணெய் போன்ற தீர்ம எரியைகளிலும் (Liquid filet) அடங்கிக் கிடக்கின்றது. நிலக்கரி என்பது என்ன? பண்டைக் காலத்திலிருந்த காடுகள்தாம் காலப்போக்கில் நிலத்தினுள் அழுந்தி உருமாறி நிலக்கரியாய் மாறியுள்ளன. நீர்ம எரியைகள் யாவும் இப்பழைய மரங்களின் சாறுகளேயாகும். ஆகவே, தாவரங்களின் ஒளிச்சேர்க்கையால் கதிரவனிடமிருந்து மரத்தினுள்ளே அன்று புகுந்த ஆற்றல் அங்கேயே உறைந்து கிடக்கின்றது. அவ்வாறு உறைந்து கிடக்கும் ஆற்றல்தான் நம் உடலினுள்ளோ வெளியிலோ எரிதல் திகழும் பொழுது உருகி வழிகின்றது: நாம் மீண்டும் வெப்பத்தையும் பெறுகின்றோம்; ஒளியையும் அடைகின்றோம். எரியை களிடமிருந்து கிடைக்கும் ஆற்றலைக்கொண்டு இயந்திரங் களையும் இயக்குகின்றோம். நான் இன்று உங்கள் முன்னால் பேசுவதற்கு வேண்டிய ஆற்றலைத் தந்தவை காலையில் உண்ட 2 இட்டிலியும் 2 பூரியுந்தாம் என்பதை உணரவேண்டும். இட்டிலியும் பூரியும் சூரிய மின்கலங்கள் போல் (Solar batteries) செயற்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளால், ஆதவனே ஆற்றல் மூலம் என்ற உண்மையும் நமக்கு ஒருவாறு புலனாகின்றது.


57. திருவருட்ப ஆறாம் திருமுறை பிள்ளை பெருவிண்ணப்பம்-62 {3411}