பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்



“வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
        ளாக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைத்தமிழ் வாணி நினக்கொரு
        விண்ணப்பம் செய்திடுவேன்;
எள்ளத் தனைப்பொழு தும்பய னின்றி
        இராதென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி
        வேல், சக்தி வேல்,சக்தி வேல்!”[1]

என்று வேண்டுகின்றார். இன்னும்,

“நண்ணும் பாட்டினொடு தாளம் - மிக
        நன்றா வுளத்தழுந்தல் வேண்டும் - பல
பண்ணிற் கோடிலகை இன்பம் - நான்
        பாடத் திறனடைதல் வேண்டும்.”[2]

என்று, தாம் பாடும் பாடல் செவ்வனே அமைதல் வேண்டும் என்று விழைகின்றார். அப்படி அமைய அன்னையின் அருளை வேண்டி நிற்கின்றார்.

“எந்த நாளும் நின்மேல் - தாயே!
       இசைகள் பாடி வாழ்வேன்”[3]

என்று தம் நினைவை வெளியிடுகின்றார். இன்னுமோரிடத்தில்,

“நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்
        நானி லத்தவர் மேனிலை எய்தவும்
பாட்டி லேதனி யின்பத்தை நாட்டவும்
        பண்ணி லேகனி கூட்டவும் வேண்டி, நான்
மூட்டும் அன்புக் கனலொடு வாணியை
        முன்னு கின்ற பொழுதி லெலாங்குரல்
காட்டி அன்னை பராசக்தி ஏழையேன்
        கவிதை யாவும் தனக்கெனக் கேட்கின்றாள்.”[4]


  1. 78. ஓம் சக்தி - 5
  2. 79. 31. யோகசித்தி - 1
  3. 80. 31. காளி ஸ்தோத்திரம் - 2
  4. 81. தோ. பா. 18 பராசக்தி - 3