பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்



அணுவின் தத்துவமே ஆடலரசனின் தத்துவமாய் - ஒரு குறியீடாய் - எழுந்தது என்றும் விளங்க வைத்தேன். அணுவாற்றலே சக்தி தத்துவமாய் உருவெடுத்தது என்றும், அறிவியல் யுகத்தில் தோன்றிய பாரதியார் அறிவியல் அடிப்படையில் தம் பாடல்களைப் படைத்துள்ளார் என்றும்,காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி,மதுரை மீனாட்சி சக்தியின் உருவ வழிபாடாய் அமைந்த தெய்வங்கள் என்றும் விளக்கி, என் இன்றைய பொழிவைத் தலைக்கட்டுகின்றேன்

கரும்பு தின்னக் கூலி கொடுப்பதற்காக அமைந்தவை பல்கலைக் கழக அறக்கட்டளைகள்: புலவர்கட்கு மரியாதை செய்வதற்காக ஏற்பட்டவை. அடியேன் என் வறுமை நிலையில் கூட என் 81ஆவது பிறந்த நாள் நினைவாய் (27-8-96) இருபத்தைந்தாயிரம் வெண்பொற்காசுகள் தந்து, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறையில் ஒர் அறக்கட்டளை அமைத்துள்ளேன். கடத்த பத்தாண்டுகளுக்கு முன்னர்த் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் இத்தகைய ஒர் அறக்கட்டளையை நிறுவியுள்ளேன். இன்றைய பேச்சுக்கு ஊற்றுவாயாய் இருக்கும் அறக் கட்டளையை நிறுவியவர் இப்பல்கலைக் கழகத்து முதல் இந்திப் பேராசிரியர் - துறைத்தலைவர் பேராசிரியர் எஸ்.சங்கரராஜு நாயுடு அவர்களுக்கும், இந்த அறக்கட்டளையின் ஆதரவில் பேசுவதற்கு வாய்ப்புத் தந்த பல்கலைக் கழக ஆட்சிக் குழுவினருக்கும், சிறப்பாய் அதன் துணைவேந்தர் பேராசிரியர் ப.க. பொன்னுசாமி அவர்களுக்கும், டாக்டர் இராதாகிருஷ்ணன் உயர்நிலை தத்துவ மைய இயக்குநர் பேராசிரியர் இரா.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும், இரண்டு நாள்களாய் என் உரைகளைச் செவிமடுத்த பேராசிரியப் பெருமக்களுக்கும் அறிஞர்கட்கும் மாணவச் செல்வங்களுக்கும் என் இதயங்கலந்த நன்றியைப் புலப்படுத்தி,

"எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
எண்ணினேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்