பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியம்

61



எடுத்துக் காட்டினேன். அணுவின் அமைப்பையும் அண்டங்களின் அமைப்பையும் ஒப்பிட்டுக் காட்டி, இந்த இரண்டனையும் தில்லைத் திருச்சிற்றம்பலவனின் ஆனந்தக் கூத்து அற்புதமாய் விளக்குவதாய் அமைகின்றது என்பதைச் சுட்டிக் காட்டினேன். இதனை, கம்பன் காட்டும் பாங்கையும் புலப்படுத்தினேன். விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் இணைத்துக் காட்டுவதற்கு மணிவாசகர் பாடலும் சேக்கிழார் பாடலும் சான்றுகளாய் அமைந்திருப்பதை எடுத்துக் காட்டினேன். கதிரவனின் இயக்கத்தைக் கம்பன் காட்டியுள்ளதைத் தெளிவாக்கினேன். திவ்விய கவியின் பாடலைச் சாக்லட்போல் சுவைக்கச் செய்து அண்டங்களை அரங்கநாதன் அமைத்த அற்புதப் பாங்கை நயம்பட விளக்கினேன்.

இராசி மண்டலத்திலுள்ள மேடம், இடபம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீன இராசிகளைக் காட்டும் திவ்விய கவியின் கற்பனை நயத்தினையும் இலக்கியச் சுவையையும் புலப்படுத்தினேன். மூல நட்சத்திரம், அவிட்ட நட்சத்திரம் ஆகிய இரண்டிலும் காட்டப்பெறுகின்ற அற்புதக் கோலத்தைத் தெளிவாக்கினேன்.

பண்டையோர் பொறிநுட்ப அறிவினைக் கல்லணை, கம்பன் பாடல் இவற்றின் மூலம் ஒரளவு தெளிவாகின்றது என்பதைப் புலப்படுத்தினேன். அவதாரங்கள் சிறப்பைக் காளமேகத்தின் கவிதையால் காட்டினேன்.

பண்டையோரின் உயிரியல் அறிவையும் மரபு வழியையும் மணிவாசகரின் பாடல், பலராமனின் பிறப்பு, வள்ளுவரின் வாக்கு, கபிலரகவல், சிகண்டியின் கதை, புராணக் குசேலரின் வரலாறு போன்றவற்றால் விளக்கினேன்.

வானியல் துறையில் அவர்கள் பெற்றிருந்த அறிவைக் கம்பன் பாடலாலும், மருத்துவத்துறையில் அவர்கள் பெற்றிருந்த அறிவு நுட்பத்தை வள்ளுவம், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி ஆகிய இலக்கியங்களைக்கொண்டும் நிலைநிறுத்தினேன். கணித இயலில் அவர்கள் கொண்டிருந்த நுண்மாண் நுழைபுலத்தைக் கம்பராமாயணம், பிங்கலந்தை போன்றவற்றாலும் விளக்கினேன். வானொலி, தொலைக்காட்சிபற்றிய சிந்தனையைப் பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற