பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தில் பண்டைக் காலத்திலேயே கையாண்டனர். இது நீர்க்கடிகாரம் (Water clock) எனப்படும். ஒரு ஏனத்திலிருந்து நீர் ஒரே சீராகத் துளிதுளியாக விழுந்து கொண்டிருப்பதைக் கொண்டு காலத்தை அளவிட்டனர்.

இத்தகைய நீர்க்கடிகாரம் தமிழ்நாட்டில் பண்டைக்காலத்தில் வழங்கியதை “குறு நீர்க்கன்னல் இணைத்தென்றிசைப்ப” என்று முல்லைப் பாட்டில் (58) வருவதிலிருந்தும், சிலப்பதிகாரத்தில் (5-49) அடியார்க்கு நல்லார், “நாழிகை வட்டிலிடுவார்” என்று கூறுவதிலிருந்தும் அறியலாம்.

விளக்கெரியப் பிடிக்கும் எண்ணெயின் அளவைக்கொண்டும், குறித்த நீளமுள்ள மெழுகுவத்தி எரிவதைக் கொண்டும், காலத்தை அளவிட்டனர். ஆகவே ஓரளவு வேலை செய்யப்பிடிக்கும் நேரத்தைக் கொண்டே, காலத்தை அளவிட்டனர் என்று கூறலாம். இத்தகைய கொள்கையை அடிப்படையாகக் கொண்டே, கடிகாரங்கள் செய்கின்றனர்.

கிடை நிழற் கடிகாரம் (Horizontal Sundial) :

இதில் கிடையாக உள்ளதொரு தகடு உண்டு. இதன் மையத்தில் ஓர் ஊசி இருக்கும். நிலவுலக எல்லை (புவியின் துருவ) அச்சுக்கு இணையாக ஊசி அமைந்திருக்கும். அதாவது அட்சரேகைச் சமமான கோணத்தில், தகட்டின் பரப்பிலிருந்து