பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

நீர்க்கடிகாரம் (Water clock):

இது பண்டைக் காலத்திலிருந்தே இந்தியாவில் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் ஞாயிற்றை எதிர்பாராமல் காலத்தை அளவிடப் பயன்பட்டது.

கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் அலெக்சாந்திரியாவில் இருந்த ஒரு நீர்க்கடிகாரத்தின் அமைப்பு ஓர் ஏனத்தில் எப்போதும் தண்ணிர் நிறைந்திருக்கும்; அதன் அடியில்உள்ள மெல்லிய குழாய் மூலம், கூம்பு வடிவக் கலம் வழியே தண்ணீர் மற்றொரு ஏனத்தில் சொட்டும். இப்பாத்திரத்தில் ஒரு மிதவை உண்டு.

பாத்திரத்தில் நீர்மட்டம் உயர உயர, மிதவையின் மட்டமும் உயரும். தண்டின் பற்களுடன் இணைந்து இயங்கும். பல் உருளையும் சுழலுவதால் அவ்உருளையில் பதித்த முள், வட்ட வடிவ முகப்பில் இயங்கி மணியைக் காட்டும். கூம்பு வடிவக்காலத்தில் பொருந்துமாறு உள்ள கூம்பு வடிவமுளைபை உயர்த்தியோ, தாழ்த்தியோ சொட்டும் தண்ணீரின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

நாள்தோறும் முளையைச் சரிப்படுத்த வேண்டும். இக்குறையை நீக்கத்தான் இயங்கி நீர்க்கடிகாரம் அமைத்தனர். இதில் ஓர் ஏனத்தில் தண்ணீர் எப்போதும் ஒரே மட்டத்திலிருக்கு