பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

மாறும், அதன் அடியிலுள்ள மெல்லிய குழாய் வழியே ஒரே சீராகத் தண்ணீர் மற்றொரு ஏனத்தில் சொட்டுமாறும் அமைந்திருந்தது. இவ்ஏனத்தில் நீர்மட்டம் உயர உயர இதிலுள்ள மிதவையின் மட்டம் உயரும். மிதவையுடன் இணைந்த ஊசி இயங்கி உருளையின்மேல் கோடுகளை வரையும்.

24 மணிக்கு ஒரு முறையே இவ்ஏனத்தில் தண்ணிர் நிரம்பும். மிதவை உச்ச நிலையையடையும்போது பல் உருளை ஒரு பல்லளவு சுழலும். ஏனத்திலுள்ள நீரை வடிகுழாய் மூலம் வெளியேற்றுவர்.

பல் உருளையில் 365 பற்களுண்டு. உருளை மீது ஊசி கிழிக்கும் வரைகளிலிருந்து காலத்தை அளவிடலாம். இன்றைய கடிகாரங்களுக்கு மூல முதல் இதுதான்.