பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடிகாரங்கள்

கடிகாரங்கள் (clocks and Watches) :

காலத்தை அளவிடும் கருவி கடிகாரம் ஆகும். பண்டைக் காலத்திலிருந்தே காலத்தை அளவிட மனிதன் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தினான். இம்முறைகளை அடிப்படையாகக் கொண்டே மணிப்பொறித் தொழில் வளர்ச்சியடைந்தது. இக்கால கடிகாரங்கள் இத்தகைய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியடைந்தவையே. கடிகை - நாழி; ஆரம் - ஒரு வட்டத்தை இணைக்கும் இணைக்கால்; மாலை - நாழிகை காட்டும் கருவி.

இடைவிடாமலும் ஒழுங்காகவும் வேலை செய்யும் ஓர் எந்திர அமைப்பே கடிகாரத்தில் முக்கியமானது. சு. கி. மு. 100-ல் அலெக்சாந்திரியாவிலிருந்த ஹிரோ (Hero) ) காலத்திலேயே கடிகார அமைப்பில் உருளையைப் பயன்படுத்தினர். எனினும் மேலைநாட்டில் 1325-இல் கிளாப்டன்பரி மடத்தில் அமைக்கப்பட்ட கடிகாரமே மிகப் பழமையானது.