பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தும் கருத்தை வெளியிட்டார். கிறிஸ்டியன் ஐகன்ஸ் (Christian Huyghens) என்பவர் ஊசல் குண்டினை முதன் முதலில் பயன்படுத்தினார்.

கடிகாரத்தின் வரலாற்றில் இது சிறந்த கட்டமாகும். கடிகாரத்தில் உள்ள ஊசற் குண்டு கைக்கடிகாரத்திலுள்ள சமன் உருளை (Balance wheel) இவற்றின் ஊசலாட்டத்தைப் பயன்படுத்திக் காலத்தைத் துல்லியமாக அளவிடமுடிகிறது.

மெய்ப்பொருள் (தத்துவம்)

ஓர் எந்திரத்தைச் சரியாகத் தொடர்ந்து இயங்க வைக்க வேண்டுமானால், அதற்குரிய ஆற்றலை ஒழுங்காகவும் ஒரே சீராகவும் அளிக்க வேண்டும். இந்தப் பொது மெய்ம்மையே கடிகாரத்தை அமைப்பதன் அடிப்படை உண்மையாகும்.

பெரிய கடிகாரங்களில் நில ஈர்ப்பு விசையினால் இறங்கும் எடையிலிருந்து ஆற்றல் பெறப்படும். சிறிய கடிகாரங்களிலும், கைக்கடிகாரங்களிலும் வளையமாகச் சுருட்டி வைக்கப்பட்ட வில்லின் சுற்றைப் பிரிப்பதால் ஆற்றல் பெறப்படும். இவ்வாறு பெறப்படும் ஆற்றலினால் உரு ளைத் தொடர் இயக்கப்படும். கடிகார விட்டுத்