பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



26


இந்த ஊசலாட்டத்தால் உருளையிலுள்ள ஊசியுடன், நெம்புகோலின் பிளவுபட்ட முனை ஈடுபட்டு நெம்புகோல் இயக்கப்படும். இதனால் பல் உருளையிலுள்ள ஒரு முளை இயங்கும். இவ் இயக்கத்தால் நெம்புகோல் பெற்ற விசை உருளை ஊசி மூலமாகச் சமன் உருளைக்குக் கிடைக்கும்; செய்முறை இதேபோல் திரும்பத் திரும்ப நிகழும்.


காலமானி விட்டுத்தடுக்கி
(Chronometer escapement)

காலமானி, காலத்தைத் துல்லியமாக அளக்கப் பயன்படும் கருவி. இதிலுள்ள விட்டுத்தடுக்கியின் ஒரு முனையில் S என்ற வில்லுடன் கூடிய L M என்ற மெல்லிய தங்கப்பட்டை வில் ஒன்று உண்டு. சமன் உருளை படத்தில் காட்டப்பட்ட திசையில் ஊசலாடும்போது, சுழலும் பல்உருளை தடையினால் (Detent) நிறுத்தி வைக்கப்படும்.

இவ் இயக்கத்தினால் சமன் உருளை உள்ள முளை, வழுக்குத் தங்கவில்லைக் கடக்கும். திரும்புகையில் அம்முளை P என்ற புயத்தைத் தள்ளிச் சுழலும் பல் உருளையை விடுவிக்கும், சமன் தண்டின்மீதுள்ள R என்ற தகட்டில் பொருத்தப்பட்டுள்ள முளை, இவ்வினையால் விசையைப் பெறுகிறது. இவ்வாறு திரும்பத் திரும்ப நிகழ்கிறது.