பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

சமன் உருளையின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தல் :

தண்டின் ஊசலாட்ட நேரத்தைக் கொடுக்க ஒரு சமன்பாடு உள்ளதைப் போலவே, சமன் உருளைக்கும் ஒரு சமன்பாடு உண்டு.

 T =2π √1/Q   இதில் I = இயங்கும் அமைப்பின் சுழற் சடத்துவம் (Moment of fnertia) d=வில்லின் விறைப்பு.

வெப்பநிலை மாறுபடுவதால், சமன் உருளையின் பகுதிகளின் அளவுகள் மாறுபடும். ஆனால் இவை ஒன்றுக்கொன்று பெரும்பாலும் ஈடு செய்து கொள்ளும். வெப்பநிலை உயர்ந்தால், வில்லின் மீள்சக்தி (Elasticity) குறைக்கப்படும்; கடிகாரம் மெதுவாகப் போகும்.

இக்குறையை நீக்க வேண்டிய அமைப்பு சமன் உருளையில் செய்யப்படுகிறது. உருளையின் விளிம்பு வெளிப்புறம் பித்தளையாலும் உட்புறம் இரும்பினாலும் ஆக்கப்பட்டிருக்கும். விட்டத்தின் குறுக்காக எதிரெதிரே வெட்டப் பட்டிருக்கும்.

வெட்டப்பட்ட இருவட்டப் பகுதிகளும், ஒரு ஒரு விட்டமாகிய புயத்தால் இணைக்கப்பட்டிருக் கும். தக்க சமநிலையில் (Poise):இருக்கச் செய்ய