பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

தடுக்கப்பூடுகிறது. தடுக்கி, (C) பெரிய சக்கரத்துடன் (GW) பொருத்தப்பட்டிருக்கும்.

எடை இறங்கினால் பெரிய சக்கரமும் சுழலும். பிணைக்கப்பட்டுள்ள சிறு பற்சக்கரங்களும், பல உருளைகளும், 30 பற்களையுடைய சுழலும் பல் உருளையும் இதனால் இயக்கப்படும். சுழலும் பல் உருளையுடன்,விட்டுத்தடுக்கி ஈடுபடுமாறு செய்யப்படும்.

விட்டுத்தடுக்கியிலிருந்து பெண்டுலம் விசையைப் பெறும். நிமிஷத்தைக் காட்டும் பெரிய முள் இடை உருளையுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

சுழலும் பல் உருளை 60 சுற்றுச் சுற்றினால் அதாவது 1 மணி நேரத்தில் இடை உருளை ஒரு சுற்றுச் சுற்றி, ஒரு மணியைக் காட்டும். ஆகவே இவ் உருளையுடன் இணைக்கப்பட்டுள்ள சிறிய முள் மணியைக் காட்டும்.

உருளைத் தொடரின் இயக்கத்தை ஒரே சீரானதாக்கிக் காலத்தைத் துல்லியமாகக் காட்ட காலமானியில் கூம்புருவ வட்டு பியூசி" (Fusee) அமைப்புப் பயன்படுகிறது.

தலைமை வில் a என்ற ஏனத்தினுள் இருக்கும். இதன்மீது சுற்றியுள்ள சங்கிலியின் மறு முனை c என்ற கூம்பு வடிவ அடப்பியின் மீது உள்ள தவாளிப்பில் சுற்றியிருக்கும். -