பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

கொண்டிருக்கும் சிறிய மின் உந்து (மோட்டார்) உண்டு. இவ் உந்து, நிமிடத்திற்கு 200 தடவை ஒரே சீராகச் சுழலுமாறு செய்யப்படுகிறது.

இணைந்து சுழலும் பல் உருளைகளால் இவ் விரைவைத் தக்கவாறு குறைத்து, நொடி (செக்கண்டு), நிமிடம், மணி முதலியவற்றைக் கடிகார முகத்தில் காட்டுமாறு செய்யப்படுகிறது.

இத்தகைய மின் கடிகாரங்களில், ஆற்றலைச் சேர்த்து வைப்பதோ, விட்டுத் தடுக்கிகளோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மாறு மின்னோட்டத்தின் அதிர்வு எண் மட்டும் நிலையாக இருப்பது முக்கியம்.

மூன்றாம் வகை மின் கடிகாரம் படிகக்கல் கடிகாரம்(Quartz Crystal Clock) எனப்படும். இது அண்மைக் காலத்திலேயே மிகுதியாகப் பயனுக்கு வந்தது.

குறிப்பிட்ட வடிவிலும் அளவிலும் வெட்டப்பட்ட படிகக் கல்லுக்கு இயற்கையான அதிர்வு உண்டு. அப்படிப்பட்ட படிகத்தின் முகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட அதிர்வுள்ளமின் ஊசலாட்டத்தை வினைப்படுத்தினால், படிகம் ஊசலாடும். இப்படி கட்டுப்படுத்தப்பட்ட அதிர்வைப் பயன்படுத்தி, உந்து இயக்கப்படும். அதிர்வைச்