பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, (காரி)-என ஏழு நாள்களாயின. ஓராண்டிற். குப் பொதுவில் பன்னிரு நிலவு மாதங்கள் கொள்ளப்பட்டன.

சித்திரை (மார்ச்சு-ஏப்ரல்), வைகாசி(ஏப்ரல்-மே), ஆனி (மே-சூன்), ஆடி (சூன்-சூலை), ஆவணி (சூலை-ஆகஸ்ஃடு), புரட்டாதி (சி) (ஆகஸ்ஃடு-செப்டம்பர்), ஐப்பசி (செப்டம்பர்-அக்டோபர்), கார்த்திகை (அக்டோபர்-நவம்பர்), மார்கழி (நவம்பர்-திசம்பர்), தை-(திசம்பர்-சனவரி), மாசி (சனவரி-பெப்ரவரி) பங்குனி (பெப்ரவரி-மார்ச்சு)- முறையாக முன்னர் ஆண்டு முதன்மை-தை மாதமாகும்.

சங்க காலத்திற்குப் பிறகு ஆடி ஆண்டின் முதன்மை மாதமாயிற்று. பின்னர் வேற்றவர் வரவாலும் கலப்பாலும் சித்திரை ஆண்டின் முதல் மாதமாயிற்று.

இப்பொழுது உள்ளவை அனைத்தும் தமிழ்ப் பெயர் கொண்ட தமிழ் மாதங்களே-இவற்றையே தமிழிலிருந்து பிறந்த அனைத்து இந்திய மொழிகளும் சிற்சில ஒலி மாற்றங்களோடு வழங்கு கின்றன.

வடமொழி வேதங்களில் நாள், கிழமை, மாதப் பெயர்கள் இல்லை; தமிழ் மக்களோடு கலந்து ஒன்றிய பிறகே கி.பி. ஐந்தாம் நூற்றாண்