பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

டில், மது, மாதவ, சுக்கிர, சுசி, நபசு, நப்சிய, இச ஊர்சு, சகச, சகசிய, தபசு, தபசிய என்று பெயரிட்டனர். ஆனால் அவை வழக்கில் இல்லை.

இயற்கையோடு ஒன்றுபட்டு உற்றறிந்து வாழ்ந்த தமிழர் ஆண்டுக்கணக்கை இளவேனில், முதுவேனில், கார், (மழைக்காலம்) இலையுதிர்காலம், மாரி, கூதிர் என அறுபருவங்களாக வகுத்தனர். ஒவ்வொரு பருவத்தையும் இரு கூறாக்கிப் பன்னிரு மாதமாக்கினர். ஆறு பருவ நிலவு மாதம் பத்திரண்டு ஆகையில் ஏறக்குறைய அறுபது செங்கதிர் (சூரிய) மாதத்திற்குச் சமம்.

இன்றுள்ள ஆங்கிலப் பகுப்பு மாதங்கள் கி.மு.விலேயே சீர் செய்யப்பட்டன. அவர்கள் சனவரி தொடங்கி திசம்பர்வரை முதலில் பத்து மாதங்களே கொண்டிருந்தனர். பருவங்கள் நான்கு கொண்டிருந்தனர். தமிழர் தொடர்பால் ஆண்டு வட்டத்தில் அறுபது நாள்கள் குறைவதனைக் கண்டனர்.

எனவே சூலியசு சீசர் காலத்தில் இது முதலில் உணரப்பட்டதால் அவர் நினைவாக சூலையைச் சேர்த்தனர். அப்பொழுதும் ஆண்டு மாதக்கணக்கு பிழைபட்டது.

அகஃடசு சீசர் காலத்தில் அவர் நினைவாக. ஆகஸ்ஃடு ஒரு மாதம் சேர்க்கப்பட்டுப் பன்னிரு,