பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41 மாதமாக்கினர். (டெசிம்-பத்து-டெசிம்பர்-பத்தாம் மாதம்) (மதி-நிலவு; மதியால் அளக்கப்பட்டது மாதம்; திங்கள்-நிலவு; திங்களின் வளர்ச்சி தேய்ச்சி கொண்டது திங்கள்.

வானியல்

தமிழர்கள் மண்ணியலைக் கண்டு நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்காகப் பிரித்ததாலேயே இவ் உலகினை நானிலம் எனக் குறித்தனர். வாழ்வோடு ஒன்றிய இயங்குதிணை, இயங்காத்திணைகளை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்றும் வகுத்தனர்.

மண்ணியலை அறிந்ததைப் போன்றே விண்ணியலை (வானியலை)யும் அறிந்திருந்தனர். ஞாயிறு-திங்கள் ஆகிய ஏழு கோள்களை அறிந்திருந்தது போன்றே, விண்ணின் நிலவின் வீடுகளாக இருபத்தேழு விண்மீன்களைக் கணக்கிட்டனர். இவற்றைக்கண்டு தெளிந்து தெரிவித் தவர் கணியன் பூங்குன்றனாரின் குடும்பத்தினர். இன்றைய அறிவியல் பொறிவளர்ச்சியற்ற தொல்பழங்காலத்திலேயே கண்கூடாக காண்டல் ஒன்றினையே தமது நுண்நோக்குக் கணிப்பாகக் கொண்டிருந்த தமிழர் ஏழு கோள்களையே அறிந்திருந்தனர். -