பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

ஞாயிறு, திங்கள், யுதன், வெள்ளி (சுக்கிரன்), செவ்வாய், வியாழன், காரி (சனி) என்பன அவை. வானியல் உண்மைகளைச் சரிவர உணராதார் தம் தொன்ம (புராண)க் கதைக்குரிய இராகு-கேது என்று இல்லாத கோள்களையும் இணைத்தனர்.

ஒவ்வோர் ஊழிக்காலத் தொடக்கத்திலும் எல்லாக் கோள்களும் ஒரே நிரையில் நின்று தம் சுழற்சி முறையைத் தொடங்கும். அவ் ஊழிக்கால முடிவில் அந்நிலைக்கே மீறும் என்று ஒரு கருத்தும் இருந்தது.

பின்னர் ஒவ்வொரு நாளும் ஒழுங்கற்ற நெறியில் செல்லுதற்குக் காரணம் ஒரு பெரும் பரிதிமீது, மற்றவை சுழல்வதே என அமைதி கூறினர் வட புலத்தார்.

பட்டறிவிலும், பகுத்தறிவிலும், நுண்ணறிவிலும் பண்பட்ட தமிழர் கோள்களுக்குச் சமமான, ஒழுங்கான உண்மையான இயக்கமுண்டு என்றுணர்த்தினர். அன்றியும் கோள்கள் வெவ்வேறான கோண இயக்கத்தை உடையனவாய்த் தோன்றுதல் அவை உலகினின்றும் வெவ்வேறு தொலைவில் இருப்பன என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர்.