பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

ஊழி, சோழர் ஊழி, சேரர் ஊழி என்ற நிலைகள் மாறின.

மூவேந்தர் மரபின் வந்த அரசர் ஆட்சிக் காலத்தை மட்டுமே இன்று அறிய முடிகிறது. கிரேக்கர் வரவே ஊழியாண்டு என்ன என்பதை அறிய முடிந்தது. மேலைய நாட்டிலும் இக் குழப்பம் இருந்தது. கிருத்துவிற்குப் பிறகே ஒழுங்குபட்டது.

இந்தியத் தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் ஆண்டுக் கணக்குகள்.

1. விக்கிரம ஆண்டு (சகாத்தம்) கி.மு.58

2. சக ஆண்டு கி.பி.78

3. குத்தர் ஆண்டு கி.பி. 320

4. அரிச ஆண்டு கி.பி. 606

5. கல சூரிய ஆண்டு கி.பி. 248

6. இலட்சுமண ஆண்டு கி.பி. 1119

7. கொல்லம் ஆண்டு கி.பி. 825

8. புத்த ஆண்டு கி. பி. 544

9. மகாவீர ஆண்டு கி. பி. 628

10. திருவள்ளுவர் ஆண்டு கி.மு.30