பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பழமொழிகள்

காலம் பொன் போன்றது.

பருவத்தே பயிர் செய்.

காலன் அறிவான் காலத்தின் அருமை.

காலத்தை அறிந்தவர் காலமும் வாழ்வர்.

கால மாரியால் ஞாலம் வாழும்.

நாளும் கோளும் நலிங்தோர்க்கு இல்லை.

பறக்கும் கேரத்தைப் பறவைகள் அறியும்.

கோழிக்குத் தெரியாதா கூவவேண்டிய வேளை.

நேரமும் காலமும் நிழலிலே தெரியும்.

நின்று பார்த்தால் நேரம் புரியும்.

காலத்தால் அன்றிப் பழா.

பூக்க ஒருநேரம், காய்க்க ஒருநேரம், கனிய ஒருநேரம்.

காலமும் கருத்தும் மலரும் மணமும்.

காலமும் நேரமும் காதலுக்கு இல்லை.

காலமும் நேரமும் கருப்பம் அறியும்.

உரிய காலம் உயரிய மருங்து.

உழைப்பவனுக்குப் பின்னால் ஓடும் காலம்.