பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

முடிவு, அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைக்கும்; காலமெனும் அந்தப் பழைய மத்யஸ்தர், ஒரு நாள் அதை முடித்து வைக்கும்.

—வில்லியம் ஷேக்ஸ்பியர்

வருவது எதுவாயினும், அது கடந்து போயே தீரும்.

—யெல்லா வீலர் வில்காக்ஸ்

காலத்தின் பல் மற்றதனைத்தையும் கொரிக் கும்; ஆனால், வாய்மையைக் கொரிக்க அதற்கு வல்லமை கிடையாது.

—தாமஸ் எச். ஹக்ஸ்லி

காலம் :—
காத்திருப்போருக்கு, மிக மந்தமானது,
அஞ்சுவோர்க்கு, மிக வேகமானது,
வருந்துவோர்க்கு, மிக நீண்டது,
களிப்போருக்கு, மிகக் குறுகியது,
ஆனால், காதலிப் போருக்கு,
காலம் இல்லவே இல்லை.

—ஹென்ரி வேன் டைக்

அளவு, காலம், எண்ணிக்கை ஆகியவை சிந்தனையின், இன்னும் சொல்லப் போனால், கற்பனையின், செயல் முறைகளேயன்றி வேறில்லை.

—பென்டிக்ட் ஸ்பினோஸா


அ. கா.—4