பக்கம்:அறிவியல் நோக்கில் காலமும் கடிகாரமும்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

 சொல்லுவர். உலகம் ஒரே விரைவுடன் சுழல்வதால் இந்நாளின் அளவு என்றுமே மாறாதது. ஆகவே விண்மீன் காலம் வானவியல் ஆராய்ச்சிக்கு நன்கு பயன்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட ஒரு விண்மீன் எப்போதும் ஒரே நேரத்தில் தோன்றுவதில்லை. அது சில நாள்களில் காலையில் தோன்றும்; சில நாள்களில் மாலையில் தோன்றும். இவ்வாறாக அந்த விண்மீனின் தோற்ற நேரம் சூரியனது அன்றாடப் போக்குக்குப் பொருந்தி இராது.

சூரியன் போக்கை ஒட்டி அன்றாடக் காரியங்களைக் கவனித்து வரும் நமக்கு விண்மீன் காலம் (“Siderial Time”) வாழ்க்கைக்குப் பயன்படாது. அதனால் நம், கடிகார நேரம் சூரியனது அன்றாடப் போக்கையொட்டியே அமைக்கப்பட்டிருக்கிறது.

செங்கதிர் நாள்

ஒரு நடுப்பகலிலிருந்து மறு நடுப்பகல் வரைக்கும் அல்லது ஒரு நள்ளிரவிலிருந்து மறு நள்ளிரவு வரைக்கும் உள்ள நேரம், தோற்ற செங்கதிர் (“Apparent Solar day”) எனப்படும் இந்நாளின் கால அளவு எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில பருவங்களில் நீண்டும், சில பருவங்களில குறுகியும் இருக்கும்.