பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் ஆய்வகம்-அமைப்பு 93 (3) பெஞ்சின் உயரம், பெளதிக இயலுக்கும் வேதியியலுக்கும் தேவைப்படும் பெஞ்சிற்குச் சற்றுத் தாழ்வாகவும் உயிரியல் பகுதியில் நுண்பெருக்கியைக்கொண்டு செய்யப்பெறும் சோதனைகளுக்கேற்ற பெஞ்சிற்குச் சற்று உயரமாகவும் அமையலாம். இதற்கேற்ற வாறு ஸ்டுல்களின் உயரமும் அமைதல்வேண்டும். இதை அமைக்கும் பொழுது மாணுக்கருக்குள்ள இருக்கை வசதிகளையும் கருத்திற் கொள் ளுதல் வேண்டும். - (4) இந்த ஆய்வகங்களே அமைப்பதில் சேகரஞ் செய்யும் இடங் களே அமைப்பது ஒரு பிரச்சிக்னயாக இருக்கும் எனவே, அதையும் நன்கு கவனித்தல் வேண்டும். தேவையான அளவு சேகர அறைகனே அமைத்துக் கொள்ளலாம் ; ஆனால் அத்துடன் பிரச்சினே தீராது; அந்த அறைகளில் சேகரஞ் செய்வதற்கேற்றவாறு இடவசதிகளும் பிறவசதி களும் அமைதல் வேண்டும். (5) ஆய்வகத்தில் நடைபெறும் சோதனைகளின் அளவையும் தரத் தையும் ஒட்டி அங்குக் கழிநீர்த்தொட்டிகள் அமையவேண்டும். எப்பகுதி யில் அதிகக் கழிநீர்த் தொட்டிகள் தேவைப்படுமோ, அதற்கேற்றவாறு தொட்டிகளின் எண்ணிக்கையை அறுதியிடுதல் வேண்டும். | 6) சுவரின் நெடுக சில இடங்களில் தண்ணிர், எரிவாயு, மின்னுற் றல் முதலியவை தாராளமாகக் கிடைக்க வசதிகள் செய்ய வேண்டும். தண்ணிர், எரிவாயு கிடைக்கும் இடங்களேயும் மின்னுற்றல் கிடைக்கும் இடங்களையும் பிரித்து அமைப்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாளுக்கன் சோதனை செய்யும் இடங்களுக்கு இவை எட்டினுல் மிகவும் வசதியாக இருக்கும் என்பதை வற்புறுத்த வேண்டியதில்லே. ஆய்வகத்தில் வடபுறமாக பெஞ்சு உயரத்திலுள்ள சாளரத்தின் வழியாக வெளிச்சம் விழும்படி ஏற்பாடுகளிருந்தால் உயிரியல்பற்றிய சோதனைகள் செய்வதற்கு வசதியாக இருக்கும். மேலிருந்தும் வெளிச்சம் வர வசதிகளிருந்தால் இ.து இன்னும் சிறக்கும். (7) மற்றும் பேசும் படங்கள், கிழற்படங்கள், படச் சுருள்கள் முதலியவை காட்டும் வசதிகளும், படப்பெருக்கிகள், கம்பியில்லாத் தந்தி முதலிய ஏற்பாடுகளும் ஆய்வகத்தில் அமையவேண்டும். இக் காரணங்களால் பயிற்றும் அறை, ஆய்வகம் ஆகியவை தனித்தனியாக அமைதல் பெருஞ் சிறப்பாகும். ஆய்வகம்-பயிற்றும் அறை கலந்ததோர் அமைப்பு: நாடு விடுதலே யடைந்த பிறகு பல சிற்றுரர்களிலும் உயர்நிலைப்பள்ளிகள் தொடங்கப் பெற்றுள்ளன. நீண்ட நாட்களாகப் பள்ளிகள் வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தவை அவ்வூர்கள். இவ்விடங்களில்,