பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$3 அறிவியல் பயிற்றும் முறை می.» میس هنر ممین عیب میبیند பெற்றிருக்கும் : குழாய்களுக்கு நேராகத் துத்தநாக வாளிகள் வைக்கப்பெற்றிருக்கும். தேவைப்படுங்கால் பயன்படுத்துவதற்காக வேருெரு வாளியும் அருகில் இருக்கும். மூக்குக் குவளைகள், குடுவைகள் முதலியவை கழுவிய பிறகு நீர் வடிவதற்கும் உலர்வதற்கும் ஏற்ற பள்ளங்களுடன் ஒரு வடிநீர்த் தட்டும் ஒரு மூலையில் வைக்கப் பெற்றிருக்கும். இதிலிருந்து வடிநீர் கழிர்ேத் தொட்டிகளில் விழுமாறு ஏற்பாடுகள் அமைக்கப்பெற்றிருக்கும். பள்ளி அறிவியல் பாடத்திட்டத்தில் வரும் சோதனைகளில் பெரும் பான்மையானவற்றிற்கு அதிகத் தண்ணிர் தேவையிராததாலும், செலவு சுருக்கம் கருதியும், மேசைகள் வேதியியல் பெளதிகம் ஆகிய இரண்டற்கும் பயன்படும் பொருட்டும், மேசையில் புழங்குமிடம் அதிக மிருத்தற்பொருட்டும், கழிநீர் வாய்க்கால்கள் குறுக்கும் கெடுக்குமாக அமைந்து திரை கெடாதிருத்தற் பொருட்டும், ர்ே தெறிக்காமல் மேசைகள் துய்மையாக இருத்தற் பொருட்டும், மேசைகளில் கழிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பெறுவதில்லை. . மற்று, மேசைகளில் இழு-தட்டுக்களோ (Drawers) அலமாரி அமைப்புகளோ இல்லை. அப்படி அமைத்தால் பெரும்பாலும் அவை: இழிந்த காகிதங்கள், உடைந்த கருவிகள், குப்பைகள் முதலியவற்றின் புகலிடமாகத்தான் பயன்படும். ஒவ்வொரு மானுக்கனும் தனக்கெனத் தனியான கருவி முதலியவற்றை வைத்துக் கொள்வதற்காகத்தான் இவை வேண்டும். ஆல்ை, உயர்நிலப் பள்ளி மாளுக்கனுக்குத் தனித்தனியாக ஆய்வு கருவிகள் தர வேண்டியதில்லே. அவற்றைப் பூட்டி வைப்பதால் மட்டிலும் அவை உடையாமலோ பிற வகையில் இசதமடையாமலோ இருக்குமென்று சொல்வதற்கில்லே. ஒவ்வொரு சோதனையின் இறுதியில் ஆசிரியர் மேற்பார்வையில் துணைக் கருவிகளேத் திரும்பவும் அலமாரிகளில் வைத்தால் அவற்றைச் சரி பார்க்கும் பொறுப்பு எற்படுவதுடன் உடைதல் முதலிய குறைகளேயும் அவ்வப்பொழுதே தீர்மானிக்கவும் இயலும். தன்னிர்த் தேவைக்கு 4 x 4 x 4 அளவுள்ள ஒரு துத்தநாகத் தொட்டியை வைத்துக்கொள்ளலாம். இத்தொட்டியை அறையின் ஒரு மூலையில் உயரமான இடத்தில் அல்லது கட்டடத்தின் மேற்கூரையில் வைத்து அதிலிருந்து கழிநீர்த் தொட்டிகளுக்குக் குழாய்களே அமைத்துக் கொள்ளலாம். இவ்வமைப்பு அதிகச் செலவில் முடியும் எனக் கருதினுல் ஒவ்வொரு கழிநீர்த் தொட்டியின் அருகிலும் பித்தளை அடைப்பானுள்ள துத்தகாகப் பீப்பாவை வைத்து அதில் நீர் நிரப்பி வைத்துக் கொள்ளலாம். - - . அறையின் பக்கச் சுவர்கள் இரண்டிலும் 7-லிருந்து 7,அடி இனத்தில் ஒதுக்கிடங்களேத் தரையிலிருந்து 3 அடி உயரத்தில் அமைத்து அவ்விடங்களில் தராசுகளே வைத்துக்கொள்ளலாம். .