பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 - - அறிவியல் பயிற்றும் முறை நேரிடும் புண்களே அழற்புண்கள் என்றும் குறிப்பிடுவர். இவ்வகைப் புண்களில் பல கிலேகள் உள. இப்புண்கள் ஏற்படுங்கால் தோல் செந்நிறமடையும் ; சில சமயம் கொப்புளங்கள் தோன்றும்; மேல்தோல் தீய்ந்து கருகிப்போகவும் கூடும் : ஆழத்திலுள்ள இழையங்கள் அழிந்து போகவும் நேரிடும். சில சமயம் ஆடை, எரிந்த தோலில் ஒட்டிக் கொள்ளும் , அப்பகுதிக்கு மேலும் தீங்கின்றி அதை அகற்றுவது கடினம். இப்புண்கள் ஏற்படுங்கால் அதிர்ச்சியாலும் அபாயம் நேரிடக் கூடும். இம்மாதிரியான சமயங்களில் அறிவியல் ஆசிரியர்கள் புண்களின் நிலைகளுக்கேற்றவாறு முதலுதவி அளித்து மருத்துவரின் உதவியை நாடுதல் வேண்டும். - இரண்டு காரணங்களால் இப்புண்களினல் அபாயம் நேரிடும். திங்கு கேரிட்ட பகுதிகளின் மூலம் தோலின் அடிப்பாகங்களுக்குக் கிருமிகள் செல்வதால் அபாயகரமான புண்கள், இரணங்கள் ஏற்படலாம். வலியினல் நோயாளி வலுவற்றுப்போய் மூர்ச்சை யடையவும் நேரிடலாம். வலுவற்ற நிலை அல்லது மூர்ச்சையடையும் கிலேயைத்தான் அதிர்ச்சியடைதல்” என்று கூறுவர். தணற் புண்கள் : புண்களில் ஒட்டியிராத ஆடையின் பகுதிகளைத் துரப்மையான கத்தரிக்கோலால் வெட்டி நீக்குதல் வேண்டும். எக்காரணத்தாலும் கொப்புளங்களே உடைத்தல் கூடாது. புண்களில் காற்று படுதல்கூடாது. சமையல் சோடா உப்பைச் சிறிதளவு நீரில் கரைத்து அக்குழம்பைப் புண்ணின்மேல் தடவி, தூய்மையான துணியால் மூடவேண்டும் ; தளர்த்தியாகக் கட்டவும் செய்யலாம். புண்ணின்மேல் குளிர்ந்த பசை, ஆலிவ் எண்ணெய் போன்றவற்றையும் தடவலாம். 3. . வாயிலும் தொண்டையிலும் நேரிடும் புண்களே ச் சிகிச்சை செய்ய வேண்டா : அவை இயற்கையிலேயே ஆறிவிடும், சளிச்சவ்வைத் தூய்மையாக வைத்துப் பாதுகாத்தல் போதுமானது. அதிகச் சூடான உணவு வகைகளேயும் அடிக்கடி பயன்படுத்தினால் வாய், தொண்டை, வயிறு முதலிய இடங்களிலுள்ள இழையங்களைக் கெடுத்து அபாயகர மான நிலையினே உண்டாக்குதல் கூடும். சற்றுக் கடுமையான நிலையிலுள்ள புண்களின்மேல் சிறிதளவு: ர்ேகலந்த சமையல் சோடா உப்புக் குழம்பு பூசிய துணியால் மூடிவிட வேண்டும். இவற்றின்மீது எண்ணெயையோ வேறு பசையையோ தடவுதல் கூடாது. இத்தகைய புண்களைத் துய்மையான துணியால் மூடி மருத்துவர் உதவியை காடுதல்வேண்டும். அழற்புண்கள் : தணற்புண்களுக்குச் செய்த முதலுதவியைப் போலவே இவற்றிற்கும் அளித்தல் வேண்டும். அடர் அமிலங்கள், எரிகாரங்க்ள், சோடியம் பொட்டாசியம் புரோமின் போன்ற வேதியியற் பொருள்களால் நேரிடும் புண்களே