பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-1 - 137. (ஆ) நீர்ப் பொருட்காட்சி நிலையம் : பள்ளியில் தக்கதோர் இடத்தில் அமைக்கப்பெறின் இது கவர்ச்சிதரும் மூலமாக (Source) அமைகின்றது. இது பல முக்கியமான அறிவியல் நிகழ்ச்சிகளே உற்று நோக்குவதற்கு வாய்ப்புகளே நல்குகின்றது. மீன், தவளை, சில நீர்ப்பூச்சிகள் ஆகியவற்றின் பிறப்பு, வளர்ச்சி வரலாறுகளே இங்கு உற்றுநோக்கலாம். (இ) பிராணிகளின் கூடுகள் : வகுப்பறையில் உற்றுநோக்க லுக்குப் பல்வேறு பிராணிகளின் கூடுகளே அமைக்கலாம். சில பிராணிகள் கூண்டில் அடைபடுவதற்குப் பொருத்தமுறுகின்றன. சிறுவர்கள் தம்முடைய செல்வப் பிராணிகளேச் சிறு நேரங்கட்கு வகுப்பிற்குக் கொணருமாறு உற்சாகப்படுத்தப்பெறலாம். பிராணிகட் காகக் கூடுகள் அமைப்பதுபற்றிய குறிப்புகளே உரிய நூல்களில் கண்டு கொள்க." { - (ஈ) வானிலை கிலேயங்கள் : சாதாரணமாக எங்கும் கிடைக்கும் பொருள்களைக்கொண்டே எளிய வானிலைக் கருவிகளே இய்ற்றலாம். அனிராய்டு அழுத்தமானி, காற்றுத் திசைகாட்டி, காற்று வேகங்காட்டி மழை அளவி, மயிர் ஈர அளவி, வானிலே இல்லம் போன்ற கருவிகளே அமைக்கும் முறைகளே உரிய நூல்களில் காண்க." (உ) வளரும் பொருள்கள் : அதிகமாக ஒளி இருக்கக்கூடிய சாளர் ஒரங்களில் வைக்கப்பெறக் கூடிய சிறிய பூச்சட்டிகள் வளரும் விதைகட்கும் சிறிய தாவரங்கட்கும் தேவையான இடத்தைத் தரும்: வேறுசில அநுபவங்கட்கு இன்னும் அதிகமான இடம் தேவைப் பட்டால், ஆழமற்ற மரப்பெட்டிகளைக் கையாளலாம். பழைய கிச்சிலிப்பழக் கூடைகள் இதற்கு மிகவும் எற்றவை. 7. அறிவியல் பாட நூல்கள் : ஆசிரியரிடம் வாய்மொழியாக அறியும் அறிவியல் செய்திகளே உறுதிபடுத்திக் கொள்ளவும், அவற்றை மேன்மேலும் பெருக்கிக்கொள்ளவும் மாளுக்கர்கட்கு உறுதுணேயாக இருப்பது அறிவியல் பாடநூல் ஆகும். பாடநூலேக்கொண்டு அவர்கள் தேவையான செய்திகளே விரைவில் பெறமுடியும். இதனுல் அறிவியல் ஆசிரியர்கள் பாடநூல்களிலுள்ளவற்றை மாளுக்கர் மனத்திற்கு எளிதில் வெற்றிகரமாக ஏற்றிவிடலாம் என்று நினைத்தல் கூடாது. நல்ல நூல்களிலும் சில செய்திகளேக் காண முடியாது ; அத்தகையவற்றை ஆசிரியர்தான் நிறைவு செய்தல் வேண்டும். பிற். நூல்களிலிருந்தும், மேற்கோள், தகவல் நூல்களிலிருந்தும், அவற்றைத் தன் பட்டறிவிலிருந்தும் அவர் திரட்டிக்கொடுத்தல் வேண்டும். - தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கென எண்ணற்ற பாடநூல்கள் வகுப்புவாரியாக வெளியிடப்பெற்றுள்ளன; ஆண்டு 1. யுனெஸ்கோ : அறிவியல் பயிற்றும் மூல முதல் நூல் பக் (55-61) 2. மேற்படி நூல் பக். : (112-118)