பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-!! சென்ற இயலில் அறிவியல் பாடம் பயிற்றுதலில் மேற்கொள்ளப் பெறும் ஒரு சில சாதனங்களேக் கண்டோம். இந்த இயலில் இன்னும் சிலவற்றைக் காண்போம். பள்ளிகளில் குடிமைப் பயிற்சித் திட்டம் நுழைந்த பிறகு அது நன்முறையில் மேற்கொள்ளப்பெற்ருல் பெரும் பயன் எய்தலாம் என்பதை அநுபவம் காட்டுகின்றது. வெளியுலகில் மக்களாட்சி முறை நடைமுறையிலிருக்கும்பொழுது பள்ளிகளிலும் அது வேண்டப்பெறுவதொன்றன்ருே ? இன்று பள்ளிகளில் பயில் இன்றவர்தாமே நாளேச் சிறந்த குடிமக்களாகத் திகழப் போகின்றனர்? எனவே, பள்ளிகளில் அறிவியற் கழகம் அமைத்து அதன் ஆதரவில் பயிற்றலில் பயன்படும் பல்வேறு சாதனங்களையும் மேற்கொள்ளலாம். அனைத்திற்கும் இயக்கும் ஆற்றல்போல் உள்ள அறிவியல் கழகத்தைப் பற்றி முதலில் அறிவோம். 1. அறிவியற் கழகம் : பள்ளிகளில் அறிவியல் பாடம் கற்பித்தலுக்குப் பெருந்துணேயாக இருப்பது அறிவியற் கழகமாகும். மாளுக்கர்களே வைத்தே இத்தகைய கழகத்தை நிறுவி அவர்களேக் கொண்டே இதை நடத்தும்படி செய்தால், மாளுக்கர்கள் பெரும் பயன் அடைவர். இக்கழகத்தில் அறிவியல் ஆசிரியர்கள் ஆலோசகர்களாக இருந்துகொண்டு கழகத்தை நன்முறையில் இயக்குவிக்கலாம். ஆசிரியர்களின் திறமைக்கேற்றவாறும், காட்டும் உற்சாகத்திற் கேற்றவாறும், இக்கழகம் பயனுள்ள துறைகளில் பணி புரியும். பள்ளியில் பயிலும் அனேவரும் இக்கழகத்தின் உறுப்பினராவர். சாதாரணமாக இத்தகைய கழகங்களுக்குத் தலைவர், செயலாளர், பொருட்காப்பாளர், சில உறுப்பினர்கள் அடங்கிய செயற்குழு ஒன்றை அமைத்து அக்குழுவைக்கொண்டு எல்லாச் செயல்களையும் முற்றுவிக்க வேண்டும். தலைமையாசிரியரைத் தலைவராகவும், அறிவியல் ஆசிரியர் களே ஆலோசகர்களாகவும் கொள்ளலாம் : ஏனேய பதவிகளே மானக் கர்களே வகிக்கச்செய்தல் வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் ஒவ்வோர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கச் செய்யலாம். கழகத்தின்